Published:Updated:

ஹைட்ரோ கார்பன் திட்டம் - ஜி.கே.வாசன் எதிர்ப்பு

Vikatan Correspondent
ஹைட்ரோ கார்பன் திட்டம் - ஜி.கே.வாசன் எதிர்ப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டம் - ஜி.கே.வாசன் எதிர்ப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டம் - ஜி.கே.வாசன் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை எதிர்த்து நெடுவாசல் கிராமமக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசன் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சோலை வனமாக உள்ள இந்தப் பகுதியை பாலைவனமாக மாற்றிவிடக் கூடாது. மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.