Published:Updated:

காஷ்மீர்:நிலச்சரிவில் சிக்கி 400 பேர் தவிப்பு!

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீர்:நிலச்சரிவில் சிக்கி 400 பேர் தவிப்பு!
காஷ்மீர்:நிலச்சரிவில் சிக்கி 400 பேர் தவிப்பு!
காஷ்மீர்:நிலச்சரிவில் சிக்கி 400 பேர் தவிப்பு!

ஜம்மு: காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 400 சுற்றுலா பயணிகள் சிக்கி  தவித்து வரும் நிலையில்,அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக  ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் திடீரென  இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.

சம்பவம் நடந்த பகுதி சுற்றுலாபயணிகள் வந்து செல்லும் இடம் ஆகும்.வாகனங்களுடன்  சிக்கி கொண்ட நபர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிக்கியவர்கள் பெண்கள், குழந்தைகளே அதிகம் அடங்குவர். பலர் மண்ணில்  புதைந்து விட்டதாகவும் தெரிகிறது.

இருப்பினும் உயிர்ச்சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ள பலருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதிகம் பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.