Published:Updated:

பி.இ.எம்.எல். தலைவர் நடராஜன் சஸ்பெண்ட்!

பி.இ.எம்.எல். தலைவர் நடராஜன் சஸ்பெண்ட்!
பி.இ.எம்.எல். தலைவர் நடராஜன் சஸ்பெண்ட்!
பி.இ.எம்.எல். தலைவர் நடராஜன் சஸ்பெண்ட்!

புதுடெல்லி: டாட்ரா ராணுவ வாகன கொள்முதல் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய  பி.இ.எம்.எல். தலைவர் நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்திற்கு டாட்ரா வாகனத்தை கொள்முதல் செய்த விவகாரத்தில்,தனக்கு ரூ. 14  லஞ்சம் ‌கொடுக்க ஒரு ராணுவ அதிகாரி முன்வந்ததாக முன்னாள் ராணுவ தளபதி  வி.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார்.  

இந்த விவகாரம் குறித்து சி.பி..ஐ. விசாரித்து வருகிறது.இந்நிலையில் ராணுவ  அமைச்சகத்தின் நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டின் (பி.இ.எம்.எல்.)  தலைவர் நடராஜனுக்கும் இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரின்  பேரில், சிபிஐ இவரை சஸ்பெண்ட் செய்யுமாறு பரிந்துரைத்தது.

இதனையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் அவரை இன்று சஸ்பெண்ட் செய்துள்ளது.