Published:Updated:

சிறுபான்மை இடஒதுக்கீடு: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதை ரத்து  செய்யும் ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய  அரசின் கோரிகையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத  உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்து  உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, கடந்த வாரம்  மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தை வருகிற 13 ம் தேதி விசாரிப்பதாகவும், அப்போது  சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆவணங்களை தாக்கல்  செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.