Published:Updated:

ஜனாதிபதி தேர்தலில் கலாம் போட்டி:மம்தா அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் கலாம் போட்டி:மம்தா அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் கலாம் போட்டி:மம்தா அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் கலாம் போட்டி:மம்தா அறிவிப்பு!

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடுவது உறுதி என்றும், அவருக்கு முன்கூட்டியே தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மம்தாவின் இந்த அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தம்மை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளது தொடர்பாக தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ள கலாம்,” இந்தியாவின் ஜனாதிபதியாக என்னை மீண்டும் பார்க்க விரும்புவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் என்னிடம் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.ஏராளமான மக்களும் இதே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த ஆதரவால் உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.அவர்கள் விருப்பம் இதுவாக இருக்கிறதென்றால் அதனை நான் மதிக்கிறேன்.இந்த யோசனை  குறித்து நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். இருப்பினும்,உரிய நேரத்தில் இது குறித்து இறுதி முடிவை எடுப்பேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.