Published:Updated:

எங்கே அந்த ரூ.1620 கோடி? கொதிக்கும் கரும்பு விவசாயிகள்!

ஏ.ராம்
எங்கே அந்த ரூ.1620 கோடி? கொதிக்கும் கரும்பு விவசாயிகள்!
எங்கே அந்த ரூ.1620 கோடி? கொதிக்கும் கரும்பு விவசாயிகள்!

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.1620 கோடியைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் பேரணி, மாநாடு, பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதுதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி. நடராஜனிடம் பேசினோம், ''தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் இன்னும் தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 1620 கோடி ரூபாயை, சர்க்கரை ஆலை என்ன செய்தது என்றே தெரியவில்லை, கரும்புத்தொகை நிலுவையில் உள்ளதால், வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் விஷம் குடித்து மாய்த்துக்கொண்ட விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதைத் தனியார் ஆலைகளும், தமிழக அரசும் புரிந்துகொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.  


 

கரும்பு சாகுபடி தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவிட்டது. கரும்பு பணத்தைத் தராமல் இழுத்தடித்து வருவதும், வறட்சியும்தான் கரும்பு சாகுபடி குறைந்து போனதற்கு காரணம். தமிழ்நாட்டில் கரும்பு 21.3 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இப்போது 2017-ம் ஆண்டு கணக்குப்படி 9.6 லட்சம் டன்னாக குறைந்துபோய்விட்டது. நெல் உற்பத்தி குறைந்துபோய்விட்டது, எள், உளுந்து, சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களும் குறைந்துபோய்விட்ட நிலையில் கரும்பு விவசாயமும் குறைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வாழ்வாதாரம் பறிபோய்விட்டதே என்றுதான் வாழ்ந்துவருகிறார்கள் விவசாயிகள்" என்று வெடித்து முடித்தார்.