Published:Updated:

`ஏங்க.. அவர் அ.தி.மு.க-வை சேர்ந்தவர்!’ -ஸ்டாலின் முன்னிலையில் தவறாக பெயரை வாசித்த தி.மு.க நிர்வாகி

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 15-வது வார்டில் போட்டியிட்டவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வினுபாலன். இவர் தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமியை விட 199 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூருக்கு வருகை தந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மாவட்டம் முழுவதிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெற்றிக்கான சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் அ.தி.மு.க-வில் இருந்து வெற்றி பெற்ற வினுபாலன் பெயர் வாசிக்கப்பட்டதால் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தஞ்சாவூர், மஹாராஜா மஹால் திருமணமண்டபத்தில் நடைபெற்ற பந்தல் சிவா மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தார். பின்னர் சங்கம் ஹோட்டலில் தங்கியவர், மாலை தஞ்சை மாவட்டங்களில் தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெற்றிக்கான சான்றிதழை ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இதில் எம்.பி-க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ராமலிங்கம், எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன், டிகேஜி.நீலமேகம், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரான சு.கல்யாணசுந்தரம் மாவட்ட ஊராட்சிக் குழுவில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை வார்டு வாரியாக வாசித்தார். அவர்கள் வரிசையாக வந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று போட்டோவும் எடுத்துக்கொண்டு சென்றனர். இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் 15-வது வார்டில் வெற்றி பெற்ற வினுபாலன் பெயரும் வாசிக்கப்பட்டது. உடனே மேடைக்கு கீழே அமர்ந்திருந்த நிர்வாகிகள் பதறிப்போய், `அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்' என சொல்ல சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசிய நிர்வாகிகள் சிலர், ``மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 15-வது வார்டில் போட்டியிட்டவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வினுபாலன். இவர் தி.மு.க வேட்பாளர் பொன்னுசாமியை விட 199 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக பொன்னுசாமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வினுபாலன் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க தடைவிதிக்கப்பட்டது.

வெற்றிபெற்றவர்கள்
வெற்றிபெற்றவர்கள்

இந்த சம்பவம் கட்சிக்காரர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. `சிறியவனான என் வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க-வினர் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை நான் நீதிமன்றத்தில் முறியடிப்பேன்' எனக் கூறி வருகிறார் வினுபாலன். அப்படிபட்டவரின் பெயரை ஸ்டாலின் முன்னிலையிலேயே தி.மு.க நிர்வாகிகள் வாசித்தது வருத்தமாக உள்ளது. அதேபோல் பாபநாசம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களை ஒன்றியச் செயலாளரான தாமரைச்செல்வன் வார்டு வாரியாக வாசித்தார்.

ஒன்றிய சேர்மன் பதவிக்கு தி.மு.க-வுக்குள்ளேயே இரண்டு பேர் போட்டியிட்டனர். இதில் சுமதி என்பவர் வெற்றி பெற்ற நிலையில், சத்யா என்பவர் தோல்வியுற்றார். அவர் பெயர் பட்டியலில் வரும் போது, `இந்தாங்க... இவர் பெயரை நான் வாசிக்க மாட்டேன் இவருடன் நான் பேசுவதில்லை' எனக் கல்யாண சுந்தரத்திடம் கூறினார்.

அதற்கு கல்யாண சுந்தரம், `அவர் வரவில்லை.. விட்டுவிடுங்க’ என்றார். தஞ்சை தி.மு.க-வில் கோஷ்டி பூசல் கடுமையாக இருக்கிறது. அதனாலேயே இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. தி.மு.க-வின் கோட்டையாக இருந்த தஞ்சாவூர் அ.தி.மு.க கோட்டையாக மாறியிருந்தது. தற்போதுதான் மீண்டும் தி.மு.க தன்னுடைய கோட்டையாக மாற்றியுள்ளது. இந்தநிலையில், ஸ்டாலின் இங்கு நிலவும் கோஷ்டிப் பூசலை சரிசெய்தால் மட்டுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெற முடியும்’ என்கின்றனர் ஆதங்கத்துடன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளோ, `வினுபாலன் பெயர் தவறுதலாக வாசிக்கப்பட்டுவிட்டது. கோஷ்டிப் பூசல் இல்லாமல் செயல்பட்டதாலேயே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் மதுக்கூரை தவிர்த்து 12 ஒன்றியங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது. பேராவூரணி ஒன்றியத்துக்காக மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் கைப்பற்றுவோம்’ என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு