Published:Updated:

`வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி’ - சங்கராபுரத்தை கலக்கிய போஸ்டர்கள்; நீதிமன்றம் வைத்த செக்!

உயர் நீதிமன்றக் கிளை
உயர் நீதிமன்றக் கிளை

பிரியதர்ஷினி பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு ஒன்றை தேவி அளித்தார்.

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ
காங்கிரஸ் எம்.எல்.ஏ

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் ஒரே பதவிக்கு இரண்டு வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.

தேவி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்
தேவி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்

முதலில் எங்களுக்குத்தான் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது எனக் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவியும், விடுபட்ட ஓட்டுகள் முழுமையாக எண்ணப்பட்ட பின் சான்றிதழ் வழங்கப்பட்டதால் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என்று பிரியதர்ஷினி தரப்பிலும் சொல்லப்பட்டதால், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில், இரு தரப்பின் ஆதரவாளர்களும் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் எனத் தனித்தனியாக போஸ்டர்களும் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரியதர்ஷினி பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு ஒன்றை அளித்தார். அதில் ’சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் பிரியதர்ஷினிக்கும் வெற்றி பெற்றுவிட்டார் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருக்கலாம். எனவே, பிரியதர்ஷினி பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

பிரிதர்ஷினியின் போஸ்டர்
பிரிதர்ஷினியின் போஸ்டர்

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் புகழேந்தி அமர்வு சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக வேட்பாளர் பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்தும் இதுதொடர்பாகத் தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற வேட்பாளர் பிரியதர்ஷினியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தால் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் யார் தொடருவது என்பதில் சிக்கல் உருவாகி காரைக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு