Published:Updated:

`தேர்தல்ல ஜெயிச்ச என் மனைவியைக் கடத்திட்டாங்க..!’ - சாக்கோட்டைக்கு `ஒலிபெருக்கி ஷாக்’ கொடுத்த கணவர்

மகேந்திரன் - தேவி மீனாள்
மகேந்திரன் - தேவி மீனாள்

`கை சின்னத்தில் வெற்றி பெற்ற என் மனைவியை தி.மு.க., கூட்டணிக் கட்சிக்காரங்க கடத்திட்டாங்க' என ஓய்வு பெற்ற துணை தாசில்தார் ஒலிபெருக்கியில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தேவி மீனாள் வெற்றிபெற்றார்.

மைக்கில் பேசும் மகேந்திரன்
மைக்கில் பேசும் மகேந்திரன்

இந்நிலையில் இவரைக் கடத்தி வைத்திருப்பதாக அவரது கணவரும் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியருமான மகேந்திரன் தனது வீட்டைப் பூட்டிக்கொண்டு மனைவியை மீட்டுத் தருமாறு ஒலிபெருக்கி மூலம் பேசி வருகிறார். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜன்னல் வழியாக நம்மிடம் பேசிய மகேந்திரன், ``எனது மனைவி மீனா தேவி 10- வது வார்டில் கை சின்னத்தில் வெற்றி பெற்றார். முழுக்க, முழுக்க என்னுடைய முயற்சியால் அவர் வெற்றி பெற்றார்.

மகேந்திரன் வீட்டுக்குள்
மகேந்திரன் வீட்டுக்குள்

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி பதவி ஏற்பு விழா முடிந்ததும் என் மனைவியை தி.மு.க கூட்டணிக் கட்சியினர் வேனில் கடத்திச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக காரைக்குடி டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்தும் பயனில்லை. இதனால் தற்போது ஒலி பெருக்கி மூலம் அனைவரின் உதவியையும் நாடியுள்ளேன்" என்றார்.

கணவரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, தேவி மீனாள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``என்னை யாரும் கடத்தவில்லை. நான் என் மகனுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளேன். என்னைப் பற்றித் தவறான தகவல் பரப்பப்படுகிறது. யாரும் அதை நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் இல்லம்
மகேந்திரன் இல்லம்

உள்ளாட்சித் தேர்தல் முடிவு பெற்ற நிலையிலும் காரைக்குடிப் பகுதியில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் விநோதமான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு