Published:Updated:

`முன்னேற்றம் சொற்பமானது; 2021ல் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம்'- உள்ளாட்சித் தேர்தல் குறித்து கமல்!

கமல்
கமல்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. இதற்கிடையே, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக எந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் ஆதரவு கிடையாது என்று இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துவந்த நிலையில், தற்போது அது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

அதில், ``இப்பெரு மய்யத்தின் குழுக் கூட்டமாகிப் பெருகி, இன்று மக்கள் சக்தியாக மாறிவிட்டது. இதுவே நமது நேற்றைய விமர்சகர்களை இன்றைய ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது என்பது இனிய உண்மை. நம்மைப் பற்றி ஹாஸ்யமும் ஹேஷியமும் ஜோசியமும் பேசியவர்கள், இன்று நம் நலம் விசாாிக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப்போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது.

``விகடன் பிரஸ் மீட்ல என்னை திறமையானவர்னு கமல் சார் சொன்னப்போ..!''- செம சந்தோஷ ஷஷாங்க் அரோரா

மாற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம், அதைத் தவணை முறையில் பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து, சாதுர்யமோ பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும். இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப்படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை.

கமல்
கமல்

ஆதாலால், மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கெனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும். இதுவே, என் ஆசையும் அறிவுரையும் ஆகும். வரும் ஐம்பது வாரங்களில், மக்கள் நலம் பேணி, நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்" என்று கூறியுள்ளார்.

எடப்பாடி மட்டுமல்ல... ஸ்டாலினும் திருந்தவேண்டும் - இது உள்ளாட்சித் தேர்தல் அத்துமீறல்!
அடுத்த கட்டுரைக்கு