Published:Updated:

`மெஜாரிட்டி நாங்கதான்; ஆனா சேர்மன் பதவிக்கு ஆள் இல்லை!’- விநோத சிக்கலில் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க

சுயேச்சையாக ஜெயித்தவர்களும் அந்தத் தகுதியில் வரவில்லை. பா.ஜ.க சார்பில் வென்றவரும், ஓர் ஆண். இந்த நிலையில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெயித்தவர்கள் மட்டும் அந்தத் தகுதியில் வருகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை ( நா.ராஜமுருகன் )

`கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை நாங்கதான் பெற்றுள்ளோம். ஆனால், ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு ஆள் கிடைக்காம, அல்லாடுறோம்' என்று கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க-வினர் புலம்பி வருகிறார்கள். அதோடு, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவரை அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் காரியத்தில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய, கிருஷ்ணராயபுரம் பகுதி அ.தி.மு.க-வினர் சிலர், ``கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான கவுன்சிலர்களை அ.தி.மு.க பெற்றபோதும், ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு மாற்றுக் கட்சியினரை இழுக்கும் நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கு. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க ஒன்பது இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. தி.மு.க 7 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. அதோடு, அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வும், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் தலா ஒரு வார்டை கைப்பற்றியுள்ளன. அதோடு, சுயேச்சை வேட்பாளர் இரண்டு பேர், தலா ஒரு வார்டை கைப்பற்றியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

`கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மை பெற்ற அ.தி.மு.கதான் கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் பதவியைக் கைப்பற்றணும்' என்றுதானே நினைப்பீர்கள்? அங்கேதான், கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க-வுக்கு விநோத பிரச்னை ஏற்பட்டிருக்கு. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி, பட்டியலின பெண்கள் பிரிவுக்கு இந்தமுறை சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க சார்பில் பட்டியலின பெண்கள் வார்டில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியடைந்துவிட்டனர்.

`மெஜாரிட்டி அ.தி.மு.க, 3 இடங்களில் பா.ஜ.க.!' -செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த கரூர் நிலவரம்

சுயேச்சையாக ஜெயித்தவர்களும் அந்தத் தகுதியில் வரவில்லை. பா.ஜ.க சார்பில் வென்றவரும், ஓர் ஆண். இந்த நிலையில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெயித்தவர்கள் மட்டும் அந்த தகுதியில் வருகிறார்கள். இதனால், நாங்க கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தைப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியும், ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு ஆள் இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாங்க ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை கைப்பற்ற, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள பட்டியலின பெண் கவுன்சிலர்களை எங்க கட்சிக்கு இழுத்தால்தான் உண்டு. அதனால், இங்குள்ள முக்கிய அ.தி.மு.க புள்ளிகள், தி.மு.க மற்றும் காங்கிரஸ் பட்டியலின பெண் ஒன்றிய கவுன்சிலர்களை அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் குதிரை பேரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

மாவட்டச் செயலாளரும், அமைச்சரும், இங்குள்ள முக்கியப் புள்ளிகளுக்கு அந்த அசைன்மென்டை கொடுத்துள்ளார். `தி.மு.க-வில் வெறும் ஒன்றிய கவுன்சிலராக இருப்பதைவிட, அ.தி.மு.க-வுக்கு வந்தால், ஒன்றிய சேர்மன் ஆகலாம். அதோடு, நிறைய சம்பாதிக்கலாம். தவிர, கட்சி மாறுவதற்கு நீங்க என்ன கேட்கிறீர்களோ அதைத் தட்டாமல் செய்ய நாங்க தயாராக இருக்கிறோம்' என்று வலைவீசி வருகிறார்கள். நாளை பதவி ஏற்பு விழா இருப்பதால், தி.மு.க அல்லது காங்கிரஸில் இருந்து ஒரு பட்டியலின பெண் கவுன்சிலரை இழுக்கும் வேலை தீவிரமாக நடக்குது. 'இதுதான் சான்ஸ்'னு அவங்களும் உடனே ஒத்துக்காம, ஏக கிராக்கி பண்ணிக்கிட்டு இருக்காங்க. `அட, கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க-வுக்கு வந்த சோதனையே'னு நாங்க புழுங்கிக்கிட்டு இருக்கிறோம்" என்றார்கள்.