Published:Updated:

உள்ளாட்சி அமைப்பின் பணிகளை அறிந்து கொள்ளலாமே! - வாசகர் பகிர்வு #MyVikatan

உலகளவில் ஊராட்சி அமைப்புகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழகம் மட்டுமே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உலகளவில் ஊராட்சி அமைப்புகளில் முன்னோடியாக திகழ்ந்தது தமிழகம் மட்டுமே. வரலாற்றில் சோழர்களின் ஆட்சியில் உள்ளாட்சி சிறப்பாகச் செயல்பட்டதும், குடவோலை முறையில் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது இன்றளவும் வாக்களிப்பதற்கான அடிப்படையாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image

நாடு விடுதலை பெற்றபின் இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி 1.ஊராட்சி, 2.ஊராட்சி ஒன்றியம், 3.மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.

#கிராம சபை

ஊராட்சியிலுள்ள அனைத்து வாக்காளர்களையும் ஒன்றிணைத்து கிராம சபை எனும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆண்டில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர்-2 என நான்கு முறை கட்டாயம் கிராம சபை கூட்ட வேண்டும்.

கிராம சபை
கிராம சபை

#ஊராட்சி

கிராம ஊராட்சி அமைப்பு உள்ளாட்சியின் அஸ்திவாரம் போல. கிராம ஊராட்சியின் தலைவர் கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் ஆவார். அவர் நியமனக்குழு, வளர்ச்சிக்குழு, வேளாண்மை மற்றும் நீர்வடிப்பகுதி குழு, பணிகள் குழு மற்றும் கல்விக்குழுவை அமைக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி, விளம்பரி வரிகள் மூலம் நிதி ஆதாரங்களைப் பெருக்கலாம். மேலும் கட்டட வரைபட அனுமதி, குடிநீர்க் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதம் தண்டத்தீர்வை என வரியில்லா வருவாய் ஆகியவை இதன் நிதி ஆதாரங்கள் ஆகும். மூன்றடுக்கு ஊராட்சியில் வரி விதிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு கிராம ஊராட்சியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#பணிகள்

*அரசு சொத்துகளைப் பாதுகாத்தல்

*தரைப்பாலம் அமைத்தல்

*தெருவிளக்கு அமைத்தல்

*கழிவுநீர்க் கால்வாய் அமைப்பது

*தெருக்களைச் சுத்தம் செய்தல்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

*பொதுக்கழிப்பிட வசதி செய்து கொடுப்பது

*இடுகாடு, சுடுகாடு ஏற்படுத்திப் பராமரிப்பது

*குடிநீர் வழங்குவது அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்

*கிராம சபை கூட்டுதல்

*பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கிடைக்க ஆய்வு செய்வது

*பசுமை வீட்டிற்கான பயனாளர்களைத் தேர்வு செய்வது.

இதுதவிர விருப்புரிமைப் பணிகள் என மரங்கள் நட்டுப் பாதுகாப்பது, பாதை அமைப்பது, சந்தை ஏற்படுத்தி பராமரிப்பது, வாகன நிறுத்தகம் தொழுவங்கள், படிப்பகம் ஏற்படுத்து பராமரிப்பது, விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்திப் பராமரிப்பது போன்றவை.

Representational Image
Representational Image

ஊராட்சி ஒன்றியம்

மூன்றடுக்கு ஊராட்சியில் இடையில் உள்ள அமைப்பு ஊராட்சி ஒன்றியம் ஆகும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் ஒன்றியக்குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவர். வட்டார வளர்ச்சி அலுவலர் செயல் அலுவலராகச் செயல்படுவார். 314 ஊராட்சி ஒன்றியங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,090 உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.

#பணிகள்

*மத்திய மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல்

*சாலைகள், சிறு பாலங்கள், தரைப்பாலங்கள், பழுதுபார்த்தல் பராமரித்தல்

*குளம் குட்டை போன்ற நீர்நிலைகளைப் புதிதாக அமைத்தல் மற்றும் பராமரித்தல்

*தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல்

*அரசு ஆரம்ப/நடுநிலைப் பள்ளிகளை புதிதாகக் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.

#வரி நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லை. வரியில்லா வருவாய்களான வாடகை, அபராதம், மாநில அரசின் மானியம், மத்திய அரசின் வளர்ச்சி நிதியும் கிடைக்கிறது.

உள்ளாட்சி அமைப்பின் பணிகளை அறிந்து கொள்ளலாமே! - வாசகர் பகிர்வு #MyVikatan

மாவட்ட ஊராட்சி

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பின் மறைமுகத் தேர்தல் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர் நிலையில் செயலராக ஓர் அலுவலர் நியமிக்கப்படுவர்.

உணவு மற்றும் வேளாண்மை, தொழிலாளர்கள், பொதுப்பணிகள், கல்வி, சுகாதாரம் என ஐவகை குழுக்களை அமைக்கும் அதிகாரம் உள்ளது.

#பணிகள்

*மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டம் தயாரித்தல்

*ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அறிக்கைகளை ஒருங்கிணைத்தல்

*விவசாயம், பால்வளம், கிராமத்தொழில், கோழிப்பண்ணை ஆகியவற்றைத் திட்டமிடல் மற்றும் ஆய்வு செய்தல்

*குடிநீர்த் திட்டப் பணிகளை மேற்கொள்ளல்

உள்ளாட்சி அமைப்பின் பணிகளை அறிந்து கொள்ளலாமே! - வாசகர் பகிர்வு #MyVikatan

#நிதி

வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. மாநில நிதி ஆணைய மானியம் மட்டுமே வருவாய் ஆகும். ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் 58% நிதியில் 8% மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் விடுவிக்கப்படுகிறது.

#நமது கடமை

எல்லா ஊர்களிலும் ஆர்வமும் துடிப்புமிக்க இளைஞர்கள், முதியவர்கள், திறமைமிக்கவர்கள் தேர்வாகியுள்ளனர். உடன் போட்டியிட்டு தோற்ற அவர்களும் பெருமை கொள்ளும் விதத்தில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். இதில் பலர் அடுத்த ஆண்டிற்கான அகில இந்திய அளவில் தம் கிராமத்தினைக் கொண்டு செல்ல எண்ணி இருப்பார்கள். இப்பணிகளைச் சரிவர செய்து கடமை ஆற்றினால் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் வெற்றியாளர். தேசத்தின் உண்மையான வளர்ச்சி கிராமத்தில்தான் உள்ளது. அக்கிராமத்தையே உங்கள் கைகளில் கொடுத்துள்ளனர் வாக்காளர்கள். களம் உங்களுக்காகக் காத்துள்ளது.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு