Published:Updated:

`கிடாக்கறி விருந்து, ரத்த தானம், நலத்திட்ட உதவி' - மதுரையில் அமர்களப்படுத்திய ரஜினி ரசிகர்கள்!

உள்ளாட்சியில் போட்டி இல்லை என்றாலும் உற்சாகத்துடன் ரஜினி ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ரஜினி பிறந்தநாள் விழா
ரஜினி பிறந்தநாள் விழா

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினி அறிவித்த போதிலும் சோர்ந்துவிடாமல் ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திவருகிறார்கள் ரசிகர்கள்.

ரஜினி விழா
ரஜினி விழா

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முக்கிய கட்சிகள் வியக்கும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வகையில் செயல்பட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி பிறந்தநாள் அன்று மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் விழா நடத்தினார்கள்.

இந்த நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் ரஜினி படம் மற்றும் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அடுத்த இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான் என்று முடிவு செய்து தற்போது வேலை செய்து வருகிறார்கள்.

கறி விருந்து
கறி விருந்து

இந்த நிலையில் ரஜினி பிறந்தநாள் விழாவை மதுரை மாநகர இளைஞர் அணியினர் இன்று பிரமாண்டமாக நடத்தினார்கள். தெப்பக்குளம் அருகே உள்ள அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிடாக்கறி விருந்து அளித்தார்கள். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் உட்பட நலிந்த மக்களுக்கு உதவிகளை வழங்கினார்கள். ரத்த தானம் வழங்கிய ரசிகர்கள், வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி அசத்தினார்கள்.

மதுரை மாவட்ட ரஜினி இளைஞர் அணிச் செயலாளர் பாலச்சந்தர் அவர்கள் ஏற்பாடு செய்த இவ்விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரபீக், ஓய்வு பெற்ற முன்னாள் ஏ.டி.எஸ்.பி குமரவேல் மதுரை மாநகரப் பொறுப்பாளர்கள் இளங்காமணி, பாலதம்புராஜ் ஆகியோர் கலந்து கலந்துகொண்டார்கள்.

ரஜினி விழா
ரஜினி விழா

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியபோது, ''உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எங்கள் தலைவருக்காக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்'' என்றனர்.