Published:Updated:

காட்டூர்: 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி... நிகழ்ந்தது எப்படி?

காட்டூர் ஊராட்சி

"70 வயசு பாட்டி விளம்பர தூதர் மாதிரி செயல்பட்டாங்க. அவங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க. ஒரு சின்ன பாதிப்பும் ஏற்படலை. ’இந்த வயசுல நானே தடுப்பூசி போட்டுக்கிட்டேன், நான் நல்லாதான் இருக்கேன். தைரியமா போயி ஊசி போட்டுக்குங்க’னு ஊர் முழுக்க சொன்னாங்க.''

காட்டூர்: 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி... நிகழ்ந்தது எப்படி?

"70 வயசு பாட்டி விளம்பர தூதர் மாதிரி செயல்பட்டாங்க. அவங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க. ஒரு சின்ன பாதிப்பும் ஏற்படலை. ’இந்த வயசுல நானே தடுப்பூசி போட்டுக்கிட்டேன், நான் நல்லாதான் இருக்கேன். தைரியமா போயி ஊசி போட்டுக்குங்க’னு ஊர் முழுக்க சொன்னாங்க.''

Published:Updated:
காட்டூர் ஊராட்சி

கொரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டு மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவிட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே, இதற்கான ஒரே தீர்வு என மருத்துவர்களும் தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பொதுமக்களில் பலருக்கு இதில் தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூர் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் 100 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது, தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கொண்ட முதல் ஊராட்சி என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி நிகழ்ந்தது இந்தச் சாதனை?

‘’ஆரம்பத்துல மக்கள்கிட்ட தயக்கம் இருக்கத்தான் செஞ்சுது. ஆனாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்குறதுல, காட்டூர் ஊராட்சியை தமிழ்நாட்லயே முன்னோடி ஊராட்சியா ஆக்கணும்கிறதுல திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ரொம்ப முனைப்பா இருந்தார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், ஊராட்சி ஒன்றிய சேர்மன் பாலசுந்தரமும் இதுல தீவிரமான ஈடுபாடு காட்டினாங்க. எங்களோட காட்டூர் ஊராட்சி நிர்வாகமும் இதுல கடுமையா உழைச்சாங்க. எங்க ஊர் கவர்மென்ட் ஸ்கூல்ல, ஜூன் 18-ம் தேதியில இருந்து ஜூன் 23-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினோம். மக்கள்கிட்ட பயமும் தயக்கமும் இருந்துச்சு" என்கிறார் காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா பிராபகரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்டூர் ஊராட்சி
காட்டூர் ஊராட்சி

அந்தத் தயக்கத்தை உடைத்தது குறித்து அவர் பேசுகையில், "உள்ளாட்சி பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் வீடு வீடா போய் மக்களைச் சந்திச்சி, இதோட அவசியத்தை எடுத்து சொன்னோம். தினமும் ஆட்டோவுல தெரு தெருவாக பிரசாரம் பண்ணோம். ஆர்வமாகி மக்கள் ஓரளவுக்கு வர ஆரம்பிச்சாங்க. தடுப்பூசி போட்டவங்களுக்கு எந்தப் பாதிப்புமே ஏற்படலைங்கற விஷயத்தை எல்லாருக்கும் புரிய வச்சோம். இதுல குறிப்பா சொல்லவேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. 70 வயசு பாட்டி ஒருத்தர் விளம்பர தூதர் மாதிரி செயல்பட்டாங்க. அவங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க. ’இந்த வயசுல நானே தடுப்பூசி போட்டுக்கிட்டேன், நான் நல்லாதான் இருக்கேன். தைரியமா போயி ஊசி போட்டுக்குங்க’னு ஊர் முழுக்க சொன்னாங்க. அதனாலயும் நிறையபேர் வந்தாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுமாதிரி இன்னும் பலர் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்தாங்க. யார் என்ன சொன்னாலும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு பலர் பிடிவாதமாவும் இருந்தாங்க. அவங்க வீட்டுக்கே போய்பேசி, அழைச்சிட்டு வந்தோம். இந்த விஷயம் தெரிஞ்சி, சிலர் வேலைக்குக் கிளம்பி போயிட்டாங்க. அவங்க வேலைபார்த்துக்கிட்டு இருக்குற இடத்துக்கே தேடிப் போய், தடுப்பூசி போட அழைச்சிக்கிட்டு வந்தோம்.

கொரோனா தடுப்பூசி முகாம் முடியப் போற அன்னைக்கும் கூட சிலர் விடுபட்டு இருந்தாங்க. அவங்களோட வீடுகளுக்கு மருத்துவர்களோடு போயி, தடுப்பூசி போட்டோம். எங்க ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 3,332 பேர். இதுல கர்ப்பிணி, பிரசவமான தாய்மார்கள் 34 பேர்.

காட்டூர் ஊராட்சி
காட்டூர் ஊராட்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் நிறைவடையாதவங்க 46 பேர். வெளிநாடுகள்ல வசிக்கக்கூடியவங்க, மருத்துவ காரணங்களால் தடுப்பூசி தவிர்க்கப்பட வேண்டியவங்க 19 பேர். 18 வயசு பூர்த்தியடையாதவங்க 880 பேர். இந்தக் கணக்குப்படி பார்த்தால், எங்க ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் 998 நபர்கள் நீங்கலாக, 2,334 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவங்க.

இந்த 2,334 பேருக்கும் முழுமையா நூறு சதவீதம் தடுப்பூசி போட்டு எங்க ஊராட்சி சாதனை படைச்சிருக்கு. இதுக்கு சுகாதாரத்துறை சிறப்பான ஒத்துழைப்பு அளிச்சதும் ஒரு முக்கிய காரணம்’’ எனத் தெரிவித்தார்.

காட்டூர் ஊராட்சி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அம்மா அஞ்சுகம் அம்மாள் வாழ்ந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வாழும் மக்கள் கொரோனா தடுப்பில் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறார்கள். காட்டூர் ஊராட்சிக்கு நம் பாராட்டுகள்!