Published:Updated:

பிறவியிலேயே இதய பாதிப்பு; 11 குழந்தைகளுக்கு 11 மணி நேரத்தில் ஆபரேஷன் செய்து சாதனை!

அறுவை சிகிச்சைக்குள்ளான குழந்தைகள்

குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு தகுந்த உபகரணங்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறது. தவறான அளவு கொண்ட உபகரணங்களை இருதயத்தில் செலுத்தினால் ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகிவிடும். இப்போது ஆபரேசன் செய்யப்பட்ட 11 குழந்தைகளில் 5 பேருக்கு இருதயத்தின் கீழ்ப்பகுதியில் துளை இருந்தது.

பிறவியிலேயே இதய பாதிப்பு; 11 குழந்தைகளுக்கு 11 மணி நேரத்தில் ஆபரேஷன் செய்து சாதனை!

குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு தகுந்த உபகரணங்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறது. தவறான அளவு கொண்ட உபகரணங்களை இருதயத்தில் செலுத்தினால் ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகிவிடும். இப்போது ஆபரேசன் செய்யப்பட்ட 11 குழந்தைகளில் 5 பேருக்கு இருதயத்தின் கீழ்ப்பகுதியில் துளை இருந்தது.

Published:Updated:
அறுவை சிகிச்சைக்குள்ளான குழந்தைகள்

நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சம் குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். அவர்களுக்கு இதய கோளாறு உட்பட பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. மும்பையில் அது போன்று பிறவியிலேயே இருதய குறைபாட்டுடன் பிறந்த 11 குழந்தைகளுக்கு, நவிமும்பை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ச்சியாக 11 மணி நேரம் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. டாக்டர் பூசன் சவான் தலைமையிலான குழு இந்த ஆபரேஷன்களை செய்து முடித்தது. அனைத்து குழந்தைகளுக்கும் ஆபரேஷன்கள் வெற்றிகரமாக முடிந்தன. இந்தக் குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் கோளாறு, எடை அதிகரிக்காதது, இருதயத்தில் துளை எனப் பல்வேறு இருதய கோளாறுகள் இருந்து வந்தன.

இது குறித்து டாக்டர் சவான் கூறுகையில், ``கடந்த செப்டம்பர் மாதம் எங்களது குழு வாசிம் மாவட்ட மாநகராட்சி மருத்துவமனையில், பிறவியிலேயே இருதயக் கோளாறு இருந்த 120 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்தோம். இதற்கு அரசு நிதியுதவி செய்கிறது. குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது எடுக்கப்படும் சோதனையில் சில நேரங்களில் சிறிய கோளாறுகள் தெரியாமல் போய்விடுகிறது. அவை குழந்தை பிறந்த பிறகுதான் தெரியவரும். சில நேரங்களில் குழந்தை பிறந்து அதிக நாள்கள் கழித்தே தெரிய வரும். பெரிய அளவில் இருதய பிரச்னை இருந்தால் அறுவை சிகிச்சை செய்வோம். அப்படியில்லாத பட்சத்தில் ஆஞ்சியோகிராபி மூலம் சிகிச்சையளிக்கிறோம்.

டாக்டர் பூசன்
டாக்டர் பூசன்

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலானது. குழந்தைகளின் சிகிச்சைக்கு தகுந்த உபகரணங்கள் கிடைப்பது கூட சவாலாக இருக்கிறது. தவறான அளவு கொண்ட உபகரணங்களை இருதயத்தில் செலுத்தினால் ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகிவிடும்.

இப்போது ஆபரேசன் செய்யப்பட்ட 11 குழந்தைகளில் 5 பேருக்கு இருதயத்தின் கீழ்ப்பகுதியில் துளை இருந்தது. 3 குழந்தைகளுக்கு ரத்தம் நுரையீரலுக்குச் செல்வதில் சிரமம் இருந்தது. 3 குழந்தைகளுக்கு இருதயத்தை இரண்டாக பிரிக்கும் பகுதியில் துளை இருந்தது. அனைத்து குழந்தைகளுக்கும் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. இனி அவர்கள் மருத்துவமனைக்கு சோதனைக்கு சென்றால் போதும். 11 மணி நேரம் தொடர்ச்சியாக 11 குழந்தைகளுக்கு ஆறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.

குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு நடிகர் சல்மான் கானின் தொண்டு நிறுவனமும் நிதியுதவி செய்து வருகிறது.