Published:Updated:

டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி!

தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிராக்கோஸ்டமி கருவியை மாற்றுவதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (18-ம் தேதி) காலை அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

உடல்நலக் குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு கருணாநிதி, முதல்முறையாகக் காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அவருக்குத் தொண்டைக்குழி (டிராக்கோஸ்டமி) அறுவைச்சிகிச்சை அப்போது மேற்கொள்ளப்பட்டது. தொண்டையில் பொருத்தப்படும் டிராக்கோஸ்டமி கருவியைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால், அந்தக் கருவி மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி, மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரின் டிராக்கோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில், நேற்று  (18-ம் தேதி) காலை மீண்டும் டிராக்கோஸ்டமி கருவியை மாற்றம் செய்வதற்காகச் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. அங்கு, பழைய டிராக்கோஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்றார். இந்தச் சிகிச்சைக்காக அவர் 4-வது முறையாக மருத்துவமனை செல்வது குறிப்பிடத்தக்கது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism