Published:Updated:

“எழுந்து வா... தலைவா!”

“எழுந்து வா... தலைவா!”
பிரீமியம் ஸ்டோரி
“எழுந்து வா... தலைவா!”

“எழுந்து வா... தலைவா!”

“எழுந்து வா... தலைவா!”

“எழுந்து வா... தலைவா!”

Published:Updated:
“எழுந்து வா... தலைவா!”
பிரீமியம் ஸ்டோரி
“எழுந்து வா... தலைவா!”

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே...” - என லட்சோப லட்சம் தொண்டர்களின் இதயங் களிலும் கணீரென ஒலித்துக்கொண் டிருக்கிறது, அந்தக் காந்தக் குரல். ‘எழுந்து வா தலைவா!’ என்று தொண்டர்கள் எழுப்பும் கோஷத்தால், ஆழ்வார்பேட்டையே அலறிக்கொண்டிருக்கிறது. காவேரி மருத்துவமனை முன்பாகக் கதறியபடிச் சுற்றிச்சுற்றி வரும் தொண்டர்களின் கண்கள் சோகத்தைச் சுமந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

“எய்யா... உங்களுக்கு என்னய்யா ஆச்சு? உங்களுக்கு வேணாம்யா இந்த ஊரு. நம்ம கிராமத்துக்கு வந்துருங்கய்யா. சனம் பூரா உங்களுக்காகக் காத்துக் கெடக்குது” என்று திருவாரூரிலிருந்து வந்தி ருந்த ஒரு பாட்டியின் கதறல், அனைவரையும் உலுக்கியது. அவரிடம் பேசினோம்.

“எம்பேரு ஜெயலெட்சுமி. திருவாரூருக்குப் பக்கத்துல மேலவாசல்தான் என் ஊரு. வயசு 62 ஆகிடுச்சுய்யா. கலைஞர் அய்யான்னா எனக்கு அம்புட்டு உசுரு. குடிசையில இருந்த எனக்கு அய்யாதான் வீடு கட்டித்தந்தாரு. எனக்குக் கல்யாணமும் செஞ்சுவெச்சு, குடவாசல் ஒன்றிய மகளிர் அணித் தலைவியாவும் ஆக்குனாரு. நான் கும்புடுற சாமி அய்யாதான். அந்தச் சாமிக்கு இப்புடி ஆகிடுச்சே. என் வீட்டுக்காரருக்கு சுகமில்ல. ஆனாலும், அய்யாவ ஒரு தடவைப் பாத்துடணும்னு புளியோதரை செஞ்சு தூக்குல எடுத்துக்கிட்டு, மாத்துத் துணி எடுத்துக்கிட்டு பஸ் ஏறி வந்துசேந்தேன். அய்யா நல்லபடியா திரும்பி வர்ற வரைக்கும் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கண்ணீர் வழியப் பேசினார்.

“எழுந்து வா... தலைவா!”

கருணாநிதியின் புகைப்படத்தை மார்பில் தொங்கவிட்டபடி, கையில் தி.மு.க கொடியை ஏந்திக்கொண்டு அங்குமிங்கும் நடந்துகொண்டி ருந்தார் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த ஒருவர். “எம்பேரு அன்பழகன். அண்ணாதான் எனக்குப் பேரு வெச்சார். எங்கெல்லாம் தி.மு.க மாநாடும், பொதுக்கூட்டமும் நடக்குதோ, அங்கெல்லாம் போயிருவேன். பேப்பர்ல கிரீடம் செஞ்சு தலையில மாட்டிக்கிட்டு, தலைவர் பார்வையில் படுற மாதிரி நிப்பேன். சில நேரம் தலைவர் பக்கத்துலேயும் போய் நிப்பேன். யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. தலைவருக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்து எனக்குச் சாப்பிடவே தோணலை. தலைவர் எப்போ கண்ணு முழிப்போரா, அப்போ தான் சாப்பிடுவேன்” என்கிறார் விரக்தியுடன்.

“எழுந்து வா... தலைவா!”

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர், சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருக் கிறார். கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவரிடம் பேசினோம்.

“எங்க சிங்கம் எழுந்துவந்து, ‘உடன்பிறப்பே...’ என எங்களைப் பாத்து ஒரு வார்த்தை சொல்லாதா என்று ஏங்கிக் கிடக்கிறோம். அந்த வார்த்தையைக் கேட்கத்தான்யா ராமநாதபுரத்துல இருந்து வந்து இங்கே தவம் கிடக்கிறேன். ராமநாதபுரத்து மக்களோட தாகத்தைத் தீர்த்து வெச்ச புண்ணிய வான் எங்க தலைவர். உண்மை நிலவரத்தை யாரும் சொல்லமாட்டேங்குறாங்க. ரொம்ப வேதனையா இருக்கு” என்று சோகத்துடன் சொன்ன ஆண்டி, “தலைவா, உன் தொண்டர்கள் லாம் இங்கே கதறிட்டு இருக்கோம். எழுந்து வந்து எங்களுக்கு நிம்மதியைக் கொடுங்க தலைவா...” என்றபடியே காவேரி மருத்துவமனையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவாறு கதறினார்.

“எழுந்து வா... தலைவா!”

“எங்களுக்குச் சொத்து சொகம் எதுவும் வேணாம். எங்க தலைவரை மட்டும் பழைய மாதிரி மீட்டுக் கொடுத்துடுங்க. அதுக்காகத்தான் நாங்க மூணு நாளா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம். தலைவரு வர்றவரைக்கும் இங்கிருந்து நகர மாட்டோம்” என்று காவேரி மருத்துவமனை முன்பாகப் பெண்கள் கூட்டம் ஒன்று கதறிக்கொண்டிருந்தது. அவர்களில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பேபி என்பவரிடம் பேசினோம். “13 வயசுல கட்சிக்கு வந்தவ நான். 24 வருஷங்களுக்கு முன்னால, தலைவருக்காக ஜெயிலுக்குப் போனேன். பாளையங்கோட்டை ஜெயில்ல வெச்சுத்தான் எனக்குப் பிரசவமே நடந்துச்சு. தலைவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், கோயிலுக்குப்போய் 101 தேங்காய் உடைச்சிட்டுத்தான் வந்தேன். தலைவர் பழைய மாதிரி திரும்பி வரணும். எங்க கண்ணீர், ஆனந்தக் கண்ணீரா மாறணும்” என்று கலங்கினார் பேபி. அவருக்குப் பக்கத்தில் நின்ற சுலோச்சனா ராமு, “பெண்களோட விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரு அவரு. தலைவருக்காக மூணு நாளா கோபாலபுரத்துல காத்துக் கெடந்தோம். திடீர்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்துட்டாங்க. நாங்க எழுப்புற சத்தம் அவரோட காதுல போய் கேக்கணும். அந்தச் சத்தத்தைக் கேட்டு, அவர் எழுந்திருச்சு வரணும்’’ என்றார் ஏக்கத்துடன்.

- மு.பார்த்தசாரதி
அட்டைப்படம்: சு.குமரேசன்
படங்கள்:கே.ராஜசேகரன், ப.சரவணகுமார்