Published:Updated:

`அவரின் ஆசையை நிறைவேற்றினோம்' - ஓய்வுபெற்ற ஆசிரியையின் உடல் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!

`அவரின் ஆசையை நிறைவேற்றினோம்' - ஓய்வுபெற்ற ஆசிரியையின் உடல் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!
`அவரின் ஆசையை நிறைவேற்றினோம்' - ஓய்வுபெற்ற ஆசிரியையின் உடல் ஆராய்ச்சிக்காக ஒப்படைப்பு!

தூத்துக்குடியில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் உடல், அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத்  தானமாக ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் தாலுகா சிவகளைப் பகுதியைச் சேர்ந்தவர் பால் ராஜேந்திரன். இவர், திராவிடர் கழகத்தின் நெல்லை மண்டலத் தலைவராக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரிபாய். 71 வயதான, ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர், திராவிடர் கழகத்தின் மகளிரணியின் முன்னாள் அமைப்புச் செயலராகவும் இருந்து வந்துள்ளார். இவரது கணவர் பால் ராஜேந்திரன்.  திருநெல்வேலி மண்டல திராவிடக் கழகத்தின் தலைவராக உள்ளார்.  இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கஸ்தூரிபாய் சிவகளையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.  இவரது இறுதிச்சடங்கு  இன்று   நடந்தது.

பின்னர், கஸ்தூரி பாயின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.  பின்னர்,  மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாக ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கஸ்தூரிபாயின் கணவர் பால் ராஜந்திரன் கூறுகையில், ”தான் மறைந்த பிறகு,  தனது உடலை,  மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என,  கஸ்தூரிபாய் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி,  அவரது உடல்  அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்டோம்” என்று கூறினார்.