Published:Updated:

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?
பிரீமியம் ஸ்டோரி
நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

Published:Updated:
நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?
பிரீமியம் ஸ்டோரி
நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ - கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும்  ஒன்று. அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த்தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூகவலைதளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல்.  

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாகவே நீட் தேர்வில் முதுநிலைப் படிப்பில் தமிழகம்தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இவர்களில் யாருமே இளநிலைப் படிப்பில் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்று வந்தவர்கள் இல்லை.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை 2016-ம் ஆண்டு வரை தமிழக மருத்துவக் கவுன்சில் நடத்தி வந்தது. 2017 முதல் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியதால் தமிழக மாணவர்கள் அதில் கலந்துகொண்டு, தேர்வெழுதிவருகின்றனர்.  2017-ல் 61.3 சதவிகிதம், 2018-ல் 61.7 மற்றும் 2019-ல் 65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

“நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்தில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் 50 சதவிகிதம் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 50 சதவிகித இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் 86 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும். வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் ஆலோசனை வழங்கத் திட்டமிட்டுவருகிறது” என்கிறார் தமிழக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜ்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியோ, “தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு எழுதாதவர்கள். இவர்கள் அதிகளவில் போட்டி போட்டுத் தேர்வெழுதி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இளநிலைப் படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதியான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பது மாயை, நல்ல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாலே தரமான மருத்துவர்களாக உருவாக முடியும் என்பதை நிரூபித்திருக் கின்றனர். நீட் தேர்வுப் பயிற்சி என்ற பெயரில் +1 மற்றும் +2 வகுப்புக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப் பயிற்சிக் கட்டணத்தை ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களால் கட்ட முடியுமா?” என்கிறார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

“முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் அதிகளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டில் இடம் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறும் வெளிமாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள்  தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் சேர்ந்துள்ளனர். இதனால், தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மொழி மற்றும் இதர பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். இவ்வாறு வெளி மாநிலங் களுக்குச் சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர்” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2017-ல் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 38.83 சதவிகிதம். 2018-ல் தேர்ச்சி விகிதம் 39.56. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது  தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு 35-வது இடத்தில் உள்ளது. 

நீட்: கைகூடும் கனவா, கானல் நீரா?

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக மருத்துவக் கலந்தாய்வில் சி.பி.எஸ்.இ மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுமே அதிக அளவில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 3,500 மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. 2018-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிப் பயிற்சியளித்தது தமிழக அரசு. தேர்வின் முடிவில் தகுதி மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,337 பேர் என்று சாதனையாகச் சொல்லியது தமிழக அரசு. ஆனால், மருத்துவச் சேர்க்கையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த 8 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது என்பதே உண்மை.

‘தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்த்து மொத்தம் 49 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் படித்த மாணவர்கள் முதுகலை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சமச்சீர்க்கல்வி,  சி.பி.எஸ்.இ என இரண்டு வெவ்வேறுவிதமான பாடத்திட்டங்களில் பிளஸ் டூ வரை படித்தவர்களுக்கு சி.பி.எஸ்.இ அடிப்படையில் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு நியாயமா?’ என்பது நீட் எதிர்ப்பாளர்களின் வாதம். ‘முதுகலை நீட் தேர்வில் முன்னேறும் நம் மாணவர்களால் இளங்கலை நீட் தேர்வில் முன்னேற முடியாதா? இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கலாம்’ என்பது நீட் ஆதரவாளர்களின் வாதம்.

இரண்டுக்கும் இடையில் இந்த ஆண்டு மே மாதம் வரப்போகும் நீட் தேர்வு எப்படி நடக்கும், அடுத்து மத்தியில் வரும் புதிய ஆட்சி புதிய முடிவுகளை எடுக்குமா என்று பல கேள்விகள் காத்திருக்கின்றன.

ஞா.சக்திவேல் முருகன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism