Published:Updated:

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

Published:Updated:
மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மிழ்நாட்டில் தடுக்கி விழுந்தாலும் பொறியியல் படித்தவர்கள்மீது விழும் அளவுக்கு இன்ஜினீயர்கள்

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்கள் விகிதம் 11,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலுமே உள்ளது. ஆயிரம் பேருக்கு ஒரு அரசு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார மையம். இதனால் மருத்துவப் படிப்புக்குத் தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு 6,000 இடங்கள் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வெழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ம் ஆண்டில் 83 ஆயிரம்  பேரும், 2018-ம் ஆண்டில் 1.17 லட்சம் பேரும் தேர்வெழுதியுள்ளனர்.  இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் தேர்வெழுத விண்ணப்பித் துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு மாற்றாக மருத்துவத்துறையில் கால்பதிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து, கல்வியாளர் ராஜராஜனிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

“மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படிப்புகளில் சேர மாணவர்கள் பெரிதும் முயல்வது ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம்.  இவற்றைத் தவிர்க்க,  ரஷ்யா, சீனா, தாய்லாந்து என வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்கச்சென்றனர். இதற்கும் மத்திய அரசு செக் வைத்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் குறைந்த பட்ச  மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது.

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்,  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடத்தும் கலந்தாய்விலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் கலந்தாய்விலும் கலந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு கலந்தாய்வுகளிலும் கடுமையான போட்டி போட வேண்டி இருக்கிறது. ஆனால், பாதுகாப்புத்துறையின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரியான, புனேவில் உள்ள Armed force Medical College-ல் நீட் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது பலருக்கும் தெரிவதில்லை. இக்கல்லூரியில் இடம்பெற்றால், கட்டணமில்லா மருத்துவப் படிப்பை முடிக்கலாம். இங்கு படிப்பையும், பயிற்சியையும் முடித்தவுடன் டாக்டர் மற்றும் மேஜர் பதவியுடன் கூடிய வேலையும் உறுதி.  ராணுவ மருத்துவமனையில் ஏழரை ஆண்டுகளுக்குப் பணியாற்றிட வேண்டும். அதன்பின்பு, விருப்பத்தின் பேரில் தொடரலாம். இதைப்போலவே, Army Nursing College-லும் சேரலாம்.

மத்திய அரசின் மருத்துவக்கல்லூரிகளான  எய்ம்ஸ் (All India Institute of Medical Science - AIIMS) -ல் MBBS, BDS படிப்பில் சேர தனியே நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இங்கு நர்சிங் படிக்கவே தனியே விண்ணப்பம் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் இயங்கிவரும், இந்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனமான, ஜிப்மர் “Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER),  கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் உள்ள 200 இடங்களும் காரைக்கால் ஜிப்மரில் 50 இடங்களும் ஜிப்மர் நடத்தும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு மாணவர்கள் http://jipmer.edu.in/ இணையதளத்தின் வழியே 12.04.2019-ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம். வேலூரில் செயல்பட்டுவரும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (Christion Medical College- CMC) மருத்துவப் படிப்புகளுக்கு 26.03.2019 தேதி வரை ஆன்லைனில் (http://admissions.cmcvellore.ac.in) விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.பி.எஸ்  மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு மாற்றாக ஏராளமான படிப்புகள் உள்ளன. BSMS - B.S.M.S. (Bachelor of Siddha Medicine and Surgery), BAMS- Bachelor of Ayurvedic Medicine and Surgery (இந்திய மருத்துவம்), BNYS- Bachelor of Naturopathy and Yogic Sciences (தமிழ்நாடு மருத்துவம் ), BAMS- Bachelor of Ayurvedic Medicine and Surgery (ஜெர்மனி மருத்துவம்), BUMS- Bachelor of Unani Medicine and Surgery (அரேபிய மருத்துவம்) என்ற மருத்துவப் படிப்புகள் உள்ளன. இதற்கான சேர்க்கை குறித்து அறிவிப்பு தமிழக மருத்துவக் கவுன்சில் வெளியிடும். இவை கடந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டது. இந்த ஆண்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பவே வாய்ப்புகள் அதிகம்.

மைசூரில் உள்ள All India Institute of Speech and Hearing (AIISH) என்ற மத்திய அரசுக் கல்லூரியில் Bachelor of Audiology and Speech Language Pathology (B.ASLP), Bachelor of Education Special Education (Hearing Impairment) [B.Ed. Sp. Ed.(HI)] என்ற இளநிலைப் படிப்புகளுக்கும், பல்வேறு பட்டயப் படிப்புகளுக்கும், முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றிற்கு http://www.aiishmysore.com/ என்ற இணையதளத்தில் 29.04.2019 தேதி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்றார்.

மருத்துவம்: படிப்புகள் பலவிதம்!

மருத்துவத்துறையில் குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏராளமான பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.   இங்கு  பி.எஸ்ஸி பட்டப்படிப்புகளாக நர்ஸிங், பிசியோதெரபி, கார்டியாக் டெக்னாலஜி, நியூரோ எலெக்ட்ரோபிஸியாலஜி, ரேடியோகிராபி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான படிப்புகள் உள்ளன.

பட்டயப்படிப்புகளாக அதாவது டிப்ளோமா படிப்புகளாக க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, ஸ்கோப் சப்போர்ட் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பல படிப்புகள் உள்ளன. இவற்றிற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கான இடங்கள் 12-ம் வகுப்பில்  இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல்/விலங்கியல்)  மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

முதுநிலைப் பட்டயப்படிப்புகளாக, மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, சைட்டோ ஜெனட்டிக்ஸ், ஜெனட்டிக்ஸ் டைகோனஸில் டெக்னாலஜி, ரிடிரெக்டிங் டெக்னாலஜி, ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், கிளினிக்கல் பேஸ்ட்ரோல் கவுன்சலிங், டயாடிக்ஸ், டெர்மெட்டாலஜி, ஹாஸ்பிட்டல் எக்கியூப்மென்ட் மெயின்டெனன்ஸ் என்ற படிப்புகள் உள்ளன.

இதைத்தவிர, பி.இ படிப்புகளாக Bio-Medical, medical electronics என்ற படிப்பு அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் வழியாகப் பெறலாம். இப்படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் வழியாகத் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு நீட் தேர்வு  மே 5-ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு 210 தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 520 மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வைப்போலவே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடத்தத் திட்டமிட்டுள்ளது   தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்.

- சக்திவேல் முருகன்