மருத்துவராகும் கனவோடு இரவு பகல் பாராமல் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது. பலர் மருத்துவக் கனவைக் கைவிட்டு, வேறு பிரிவுகளை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவம் சார்ந்து பலநூறு படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பெரும்பாலானோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்தும், அவற்றில் சேர்வதற்கான தகுதிகள் குறித்தும் கல்வியாளர் ஆர்.ராஜராஜனிடம் கேட்டோம்.

“நீட் தேர்வு ஒருவழியாக முடிந்துவிட்டது. தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதையும் மாணவர்கள் ஓரளவுக்குக் கணித்திருப்பார்கள். சில மாணவர்கள், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், ஜிப்மரில் இடம்பிடிக்கத் தீவிரமாக நுழைவுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருப்பார்கள். அவை மட்டுமன்றி, புனேவில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் (AFMC) விண்ணப்பிக்கலாம். இங்கு இடம் கிடைத்தால், கல்விக்கட்டணம், தங்குமிடம் அனைத்தும் இலவசம். படித்து முடித்த பின், ‘மேஜர்’ என்ற பதவியுடன் ஏழரை ஆண்டுகள் நல்ல ஊதியத்துடன் வேலையும் கிடைத்துவிடும். அதற்குப் பிறகு விருப்பப்பட்டால், ராணுவத்திலே பணியைத் தொடரலாம். இல்லையேல், சிவில் பணிக்கு வந்துவிடலாம். நீட் தேர்வின் தர வரிசைப்படிதான் இங்கு மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதனால், தனி நுழைவுத்தேர்வு கிடையாது. இதற்கான அறிவிப்பு ஜூன் இரண்டாம் வாரம் வெளியாகும்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தவிர்த்து, ஆயுஷ் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற படிப்புகள் இருக்கின்றன. அதற்கான இடங்களும் நீட் தேர்வின் தரவரிசை அடிப்படையில்தான் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடும்போது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தவிர, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்புகள் நிறைய உண்டு. மாணவர்கள் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்கலாம்.

பி.பார்ம் படிப்புக்கு எப்போதும் பெரிய தேவை உண்டு. மருந்தாளுநர்களாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியலாம். வெளிநாடுகளிலும் தேவை அதிகம். நர்சிங் பட்டப் படிப்புக்கும் தேவை ஏராளம். இந்தியாவிலிருந்து செல்லும் தகுதிவாய்ந்த நர்ஸ்களுக்கு வெளிநாடுகளில் லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது.

பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, விபத்துக்கால முதலுதவி சிகிச்சை சார்ந்த ஆக்ஸிடென்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, மொழிக்குறைபாடு சிகிச்சைக்கான ஆடியாலஜி அண்டு ஸ்பீச் லாங்வேஜ் பேத்தாலஜி, இதயம் தொடர்பான கார்டியாக் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, லேப் டெக்னாலஜி, மெடிக்கல் சோஷியாலஜி, நியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் அண்டு அனஸ்தீஸியா டெக்னாலஜி, கண் சிகிச்சை தொடர்பான ஆப்தோமெட்ரி, மூட்டு தொடர்பான புரொஸ்தெட்டிக்ஸ் அண்டு ஆர்த்தோடிக்ஸ், ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், ரெஸ்பிரேட்டரி தெரபி, ஃபிட்னஸ் அண்டு லைஃப்ஸ்டைல் மாடிஃபிகேஷன், கிளினிக்கல் நியூட்ரீஷியன், மைக்ரோ பயாலஜி என மருத்துவம் சார்ந்து இருபதுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன.

உயிரியல் சார்ந்த பப்ளிக் ஹெல்த் எண்டோமாலஜி, கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான லேர்னிங் டிசெபிலிட்டி, சர்க்கரை நோய் தொடர்பான டயாபெடிக் எஜுகேஷன், ஹெல்த் புரொமோஷன் அண்டு எஜுகேஷன், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னாலஜி, மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான வார்டு அட்மினிஸ்ட்ரேஷன், கதிரியக்கம் தொடர்பான ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, காது கேளாத குழந்தைகளுக்குப் பேச்சுப்பயிற்சி அளிக்கும் ஆடிட்டரி வெர்பல் தெரபி, உடல் இயக்கச் செயல்பாடுகளுக்கான பயோ - மெக்கானிக்ஸ் அண்டு கினிஸியாலஜி, மருத்துவப் பாதுகாப்பு தொடர்பான கிளினிக்கல் ரிசர்ச், உடற்பயிற்சிகள் தொடர்பாக எக்ஸர்சைஸ் பிசியாலஜி, பொதுச் சுகாதாரம் பற்றிய பப்ளிக் ஹெல்த் ஜர்னலிசம் எனப் பல முதுநிலைப் பட்டப்படிப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

இவைதவிர, மருத்துவம் சார்ந்த டிப்ளோமா படிப்புகளும் நிறைய உள்ளன. ஆக்ஸிடென்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, ஹெல்த் கேர் எய்டு, அனஸ்தீஸியா டெக்னாலஜி, ஆப்தமாலிக் அசிஸ்டென்ட், ஸ்கோப் சப்போர்ட் டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ், ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, கார்டியாக் நான் இன்வேசிவ் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி போன்ற டிப்ளோமா படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

மேற்கண்ட பட்டம் மற்றும் டிப்ளோமா மருத்துவப் படிப்புகளுக்கு, ப்ளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங், மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற மருத்துவம் தொடர்பான இளநிலைப் பொறியியல் படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தில் பி.வி.எஸ்.சி (BVSC) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கும்...” என்கிறார் ராஜராஜன்.

தமிழகம் உலகின் மருத்துவத் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்குப் பெரு வளர்ச்சியை எட்டிவருகிறது. இச்சூழலில், மேற்கண்ட மருத்துவம் சார்ந்த பட்ட, பட்டயப் படிப்புகளுக்கு ஏராளமான தேவைகள் உருவாகியுள்ளன. தவிர, வெளிநாடுகளிலும் இப்படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. நீட் தேர்வு கைவிட்டாலும், இந்தப் படிப்புகள் கைவிடாது. எந்த மனத்தடையும் இல்லாமல் மாணவர்கள் இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்!

- இரா.செந்தில் குமார்