Published:Updated:

'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் ஊழியர்கள்  லஞ்சம்  கேட்பதாகவும், சிறிய காயம் அடைந்து சேர்ந்தாலும்  அரசின் காப்பீடு திட்ட கார்டுகளை கேட்டு டாக்டர்கள்  நோயாளிகளை தொல்லை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான செல்வக்குமார் என்பவரிடம் நடந்த விபரங்களை கேட்டோம்.

"எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் என்னுடைய உறவினரைப் பார்க்க பட்டுக்கோட்டைக்கு வந்த போது விபத்து ஏற்பட்டது.

எங்க அம்மாவிற்கு கையும், காலும் முறிந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து அட்மிட் செய்தோம்.

நான் அங்கு தங்கியபின் ஏன் இந்த மருத்துவமனையில் சேர்ந்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

எதற்கெடுத்தாலும் ஊழியர்கள் காசு கேட்கிறார்கள். உள்ளே போவதற்கு 10 ரூபாய், ஸ்ட்ரெச்சர் தள்ள 50 ரூபாய், கட்டு போட 100 ரூபாய்ன்னு காசு இல்லாமல் எதுவும் நடக்கலை.

இதைவிட பெரிய கூத்து என்னன்னா நகம் பெயர்ந்துட்டுதுன்னு அட்மிட் ஆகிறவங்களுக்கு கூட அம்மா காப்பீடு திட்ட அட்டை கேட்கிறார்கள். முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு, அம்மா காப்பீடு திட்ட அட்டை இருக்கிறதா? என காப்பீடு திட்ட அட்டையை கேட்கிறார்கள். அது இருந்தால்தான் மேல் சிகிச்சைக்கு நட வடிக்கை எடுக்கிறார்கள்.

 'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

என் அம்மாவின் அடுத்த படுக்கையில் இருந்து பெண்மணி விபத்து ஏற் பட்டு அட்மிட் ஆனவங்க. அவங்க கிட்ட காப்பீடு திட்ட அட்டை இல்லை. அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் காப்பீடு திட்ட அட்டை இருந்தால்தான் ஆப்ரேஷன் செய்ய முடியும் என்று சொன்னார்கள். அவங்க எவ்வளவோ கெஞ்சியும் டாக்டர்கள் ஆபரேஷனை தள்ளிப் போட்டுட்டாங்க.

இதுகுறித்து டாக்டர்கிட்ட நான் கேட்டேன் என்பதற்காக, எங்க அம்மாவை  டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி விட்டார் அந்த டாக்டர். அம்மா காப்பீடு திட்டத்துல பெரும் ஊழல் நடக்குதுங்க. இதையெல்லாம் நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று வழக்கு தொடர போகின்றேன்" என்றார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மோகன், “பைக் ஆக்சிடன்ட் ஆகி என் மனைவிக்கு கால் முறிஞ்சு இங்கு கொண்டு வந்து சேர்த்தோம்,  கட்டு போட்டு பெட்ல படுக்க வச்சாங்க. அம்மா காப்பீடு திட்ட அட்டை இருக்குதான்னு கேட்டாங்க. பதிவு செய்திருக்கோம்.

கார்டு இன்னும் வரலைன்னோம். காப்பீடு திட்ட அட்டை இல்லையென்றால் மூன்று மாதம் ஆனாலும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி கையை விரித்துவிட்டனர் டாக்டர்கள்.

 'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

என் மனைவிக்கு காப்பீடு திட்ட அட்டை வாங்கி தருகிறோம், ஆபரேஷன் பன்னுங்கன்னு சொல்லியும் 'அதெல்லாம் முடியாது !'ன்னு கறாரா சொல்லிட்டாங்க. ஒரு டாக்டர், “கல்யாணம் பண்ண ஆசை இருந்தால் வரதட்சணை கொடுத்துதானே ஆகனும்னு கிண்டலா சொன்னார். வேற வழியில்லாம இப்ப என் மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிவு பண்ணிட்டேன்” என்றார்.

 'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

“வீட்டில் சாமான்கள் அடுக்கும்போது தவறி விழுந்து என் மனைவிக்கு கை மணிக்கட்டில் அடிபட்டு விட்டது. பாபாநாசம் அரசு மருத்துவமனையில் காட்டினோம்.

 'உள்ளே போவதற்கு ரூ.10 , ஸ்ட்ரெச்சர் தள்ள ரூ. 50, கட்டு போட ரூ.100!'- தஞ்சை அரசு மருத்துவமனை மீது பகீர் புகார்!

அவங்க தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போகச் சொன்னாங்க. இங்கே வந்தால் கை முழுக்க கட்ட போட்டுவிட்டு 15 நாள் இருக்க சொல்லிட்டாங்க. இப்ப அம்மா காப்பீடு திட்ட அட்டை இருக்கிறதா என்று கேட்கிறார்கள். காப்பீடு திட்ட அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுத்திருக்கிறேன்.

போன்ல மெசேஜ் வரும்னு அப்பத்தான் ஆபரேஷன் செய்யமுடியும்னு சொல்லிட்டாங்க' என்று ஆதங்கப்பட்டார் சின்னப்பொண்ணு என்ற நோயாளியின் கணவர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் சங்கரநாராயணனிடம் பேசினோம்.

"அம்மா காப்பீடு திட்ட அட்டையில் எந்தவிதமான முறைகேடுகளும் செய்வதற்கான வாய்ப்பில்லை. நோயாளிகளை அன்பான முறையில்தான் டாக்டர்கள் கவனித்து கொள்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

மருத்துவம் என்பது புனிதமான தொழில், அந்த புனிதத்தை காப்பது ஒவ்வொரு மருத்துவரின் தலையாய கடமை!

- ஏ. ராம்
படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு