கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் சாதாரண நோய்களுக்குக்கூட வைத்தியம் பார்க்கத் தயங்கின தனியார் மருத்துவமனைகள். ஆனால், கொரோனா சிகிச்சைக்கு அரசுத் தரப்பில் கட்டணம் நிர்ணயித்த பிறகு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கச் சுறுசுறுப்பாகத் தயாராகிவிட்டன. இதற்கிடையே முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்திலும் கொரோனா சிகிச்சையை இணைத்துள்ளது அரசு. ஏற்கெனவே அந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் நிலவிவரும் நிலையில், தற்போதை சூழலில் முறைகேடுகள் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது குறித்துப் பேசியவர்கள், “தமிழகத்தில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சையளிக்க அனுமதி அளித்திருக்கிறது, தமிழக அரசு. சுகாதாரத் துறை மேலிடம் வரை தனியார் மருத்துவமனைகள் ‘கவனித்தால்’தான் முதலமைச் சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சையளிக்க அனுமதி வாங்க முடியும். இந்தத் திட்டத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் அபரிமிதமான வருமானம் ஈட்டிவருகின்றன தனியார் மருத்துவமனைகள்.

காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரியும் தொடர்பு அலுவலர்கள் (லையசன் ஆபீஸர்), ஒருங்கிணைப் பாளர்கள், மாவட்டத் திட்ட அலுவலர், விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாகத்தான் இருக்கி றார்கள். ஒவ்வொரு சிகிச்சைக்கும் மருத்துவமனை க்ளெய்ம் செய்யும் தொகையில் 10 சதவிகிதம் வரை லஞ்சமாகக் கொடுக்கப்படுகிறது. ஒழுங்காக லஞ்சம் கொடுக்காத மருத்துவமனைகளை இந்தத் திட்டத்திலிருந்து நீக்குவதும் உண்டு.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் கேட்கும் முதல் கேள்வியே, ‘முதலமைச்சர் இன்ஷூரன்ஸ் அட்டைவைத்திருக்கிறீர்களா?’ என்பதுதான். அட்டைவைத்திருந்தால், நோயாளியிடம் கட்டணம் வாங்குவதில் பிரச்னையே இருக்காது. முடிந்தவரை சுருட்டலாம்.

நோயாளிகளுக்குச் சாதாரணமாக மாவுக்கட்டு போட்டுச் சரிசெய்துவிடக்கூடிய அளவிலிருந்தாலும், அறுவை சிகிச்சை செய்து, பிளேட் வைத்து, இன்ஷூரன்ஸ் தொகையை க்ளெய்ம் செய்துவிடுவார்கள். சில தனியார் மருத்துவமனைகள், இன்ஷூரன்ஸ் தொகை க்ளெய்ம் செய்ததுபோக மேலும் ஒரு தொகையை நோயாளிகளிடம் வாங்குவதும் உண்டு. மக்களின் அறியாமையும் உயிர் பயமும் மருத்துவமனைகளுக்குச் சாதகமாக அமைந்து விடுவதால், அனைத்து வியாதிகளுக்குமான சிகிச்சைகளிலும் இப்படிக் கொள்ளையடிக்கப் படுகிறது. இனி, கொரோனா விஷயத்திலும் இதுதான் நடக்கப்போகிறது.

தற்போது, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனா தொற்று அறிகுறியுடன் பொது வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒரு நாள் கட்டணம் 5,000 ரூபாய், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒரு நாள் கட்டணம் 9,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும் என நிர்ணயிக்கப்பட்டிருக் கிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம், ‘கொரோனாவுக்கு 17 நாள்கள் சிகிச்சை’ என்று பரிந்துரைத்துள்ளது. அதன்படி பார்த்தால், அதிகபட்சமாக 2.55 லட்ச ரூபாய் வசூலிப்பார்கள்.

ஏற்கெனவே முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்குத்தான் அதிகபட்ச கட்டணமாக 1,72,000 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதையும் மிஞ்சிவிட்டது கொரோனா கட்டணம். இத்தனைக்கும் கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. சிகிச்சைக்கான தெளிவான வழிமுறைகளும் இல்லை. இந்தச் சூழலில், கொரோனா சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கட்டணம் நிர்ணயித்திருப்பது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்” என்றவர்கள், சிகிச்சை செலவுகளைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்.

“பொதுவாக பாராசிட்டமால் மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், கபசுரக்குடிநீர், சூப், சத்தான உணவு ஆகியவைதான் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் இவற்றுக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் செலவாகாது. இந்தநிலையில் இவ்வளவு கட்டணம் நிர்ணயித்திருப்பதை வைத்தே, கொரோனா சிகிச்சையில் மிகப்பெரிய அளவில் கூட்டுக்கொள்ளைக்கு திட்டமிட்டிருக் கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும். லேசான அறிகுறிகளுடன் வருபவர்களைக்கூட ஐ.சி.யூ-வில் வைத்து பணம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டு” என்றனர்.

இது குறித்து காப்பீட்டுத் திட்ட அதிகாரி செந்தில்குமாரிடம் பேசினோம். “தனியார் மருத்துவ மனைகள், அனைத்து நோயாளிகளிடமும் 2,55,000 ரூபாய் என்று க்ளெய்ம் செய்துவிட முடியாது. மற்ற நோய்களைப்போல கொரோனாவுக்கான சிகிச்சையை பேக்கேஜில் சேர்க்கவில்லை. அதனால், அனுமதிக்கப்படும் நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் செய்யப்பட்ட மருத்துவம், எத்தனை நாள்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தார் போன்ற விவரங்களை மருத்துவமனையிலிருந்து அனுப்பு வார்கள். அவற்றை ஆய்வு செய்துதான் காப்பீடுத் தொகை வழங்கப்படும்.

ஐ.சி.யூ., வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளுக்குத்தான் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து கூடுதல் தொகை வழங்கப்படும். அதேபோல ஆரம்பகட்ட கொரோனா தொற்றைச் சாதாரண மாத்திரைகளாலேயே குணப்படுத்திவிட முடியுமென்பதால், `இப்படிப்பட்டவர்களைத் தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறோம். அதனால் கொரோனா சிகிச்சையில் முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை” என்றார்.

இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்க அகில இந்தியத் துணைத்தலைவர் டாக்டர் ஜெயலாலிடம் பேசினோம். ‘‘இன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால், அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் நிர்ணயித்திருக்கும் கட்டணம் மிகக்குறைவு. இன்று இருக்கும் விலைவாசியில் அரசாங்கம் நிர்ணத்திருக்கும் கட்டணத்தில் சிகிச்சையளிப்பது சாத்தியமில்லாத விஷயம். குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் தான் இந்தத் திட்டத்தில் இருக்கின்றன. இப்போது கொரோனாவுக்கு நிர்ணயித்திருக்கும் கட்டணமும் மிகமிகக் குறைவானதுதான். மருத்துவமனையில் ஒரு கேஸ் அட்மிட் ஆனாலும் அவருக்காக ஆறேழு ஸ்டாஃப் நர்ஸ்கள், டாக்டர்கள் கவச உடை அணிந்துதான் வேலை செய்ய முடியும். ஒவ்வொரு நாளைக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.