கொரோனா தொற்றுப் பரவலில் உலக அளவில் உற்றுநோக்கப்படும் நகரமாகியிருக்கிறது சென்னை. நாளுக்குநாள் பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி என்னதான் செய்துகொண்டிருக்கிறது? சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.பிரகாஷைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“சென்னையில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதா?”

“சமூகப் பரவல் என்பதைச் சில காரணிகள், புள்ளிவிவரங்களை வைத்துத்தான் கூற முடியும். சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதா என்பதைத் தெரிவிக்கும் அதிகாரம், அதற்கான தொழில்நுட்பம் தேசிய நிறுவனங்களிடம்தான் உள்ளன. அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்காதவரை நாங்கள் கூறினால் அது அதிகாரபூர்வமற்றதாகவே இருக்கும்.”

“இப்போதைய சூழலைப் பார்த்தால், பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் போலிருக்கிறதே?”

“பத்து லட்சம் பேரில் எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்கிறோம் என்பது உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கிய நடைமுறை. சென்னையில் பத்து லட்சம் பேரில் 18,000 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவு பாதிப்பு உள்ளவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிக அளவு தொற்று கண்டறியப்படுவதால் நிர்வாகக் குறைபாடு என்று அர்த்தம் இல்லை. சரியாக வேலை பார்க்கிறோம்; தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.”

“சென்னையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா?”

“தொற்று தொடங்கி 90 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை இறப்பு விகிதம் 0.86 சதவிகிதத்தைத் தாண்டவில்லை. மூன்று மாதங்களாக இறப்பு விகிதம் இந்த அளவுக்குக் குறைந்து காணப்படுவதை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் தீவிரமான பணிகளுக்குக் கிடைத்த சான்றாகவே கருதுகிறோம்.”

“இறப்பு விகிதம் குறைந்திருப்பதைச் சாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவர் இறந்தாலும் அதுவும் இழப்புதான். எனவே, இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?”

“மாநகராட்சி சார்பில் சென்னையில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்கிறோம். தினமும் 700-க்கும் அதிகமானவர்கள் அறிகுறிகளுடன் கண்டறியப்படுகிறார்கள். அவர்களில் பலருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு, குணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.”

“ஆனால், மாநகராட்சியின் நிர்வாகத்திறன் குறைபாடு காரணமாகவே கூடுதல் அதிகாரிகளும் அமைச்சர்களும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்களே?”

“இதை நிர்வாகத்திறன் குறைபாடு என்று சொல்லக் கூடாது. பெரும் அவசரநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவே அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது இப்படிச் செய்வது வழக்கம். பலரது கைகள் ஒன்று சேரும்போதுதான் பலம் அதிகரிக்கும்.”

“சென்னையில் எத்தனை படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன?”

“20,000 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. இந்த எண்ணிக்கை சில தினங்களுக்குள் 35,000 என்ற அளவில் உயர்த்தப்படும்.”

“போதுமான அளவு பரிசோதனைக் கருவிகள் கையிருப்பு உள்ளனவா?”

“மற்ற மாநிலங்களைவிடவும் நம்மிடம் அதிகமாகவே கையிருப்பு உள்ளது. இன்றளவும் சென்னையில்தான் அதிக அளவு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.”

“தொற்றைக் கட்டுப்படுத்த சென்னையில் வேறு என்னவெல்லாம் செய்துவருகிறீர்கள்?”

“அனைத்துத் தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கிறோம். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 மக்கள் வசிக்கிறார்கள். குடிசைப் பகுதிகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது. 92 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடிசைப் பகுதிகளை 1,979 பகுதிகளாகப் பிரித்து, அங்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்குள்ள மக்களுக்கு முகக்கவசங்கள், கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகளை வழங்குகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நகரம் முழுவதுமே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.”

“ `சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு வரும்’ என்று செய்திகள் வருகின்றனவே?”

“இன்றுவரை அப்படி ஒரு திட்டம் இல்லை. அதிகாரபூர்வமான அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். வதந்திகளை நம்பிக் குழப்பம் அடைய வேண்டாம்.”

“சென்னை கொரோனாவிலிருந்து மீளுமா, மாநகராட்சி சார்பில் மக்களுக்கு நீங்கள் கூற நினைப்பது என்ன?”

“சென்னை மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணியுங்கள்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்; நிச்சயம் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீண்டுவிடலாம். ஆனால், பலரும் முகக்கவசம் அணியாமல் திரிவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் மாற வேண்டும். சிறிது காலத்துக்கு முகக் கவசம் நமது உடலில் ஓர் அங்கம்போல இருக்கட்டும். ஒவ்வொருவரும் அரசின் அறிவுரைகளைக் கேட்டுச் சரியாகச் செயல்பட்டால் விரைவில் சென்னை மீண்டெழும்.”