Published:Updated:

``10 கோடி கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன!" - கோவிஷீல்ட் சிஇஓ அதிர்ச்சி தகவல்

தடுப்பூசி

``பூஸ்டர் டோஸ்களுக்கும் தற்போது தேவை குறைந்துவிட்டது. மக்களும் சலிப்படைந்து விட்டனர்." - கோவிஷீல்ட் சிஇஓ

``10 கோடி கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன!" - கோவிஷீல்ட் சிஇஓ அதிர்ச்சி தகவல்

``பூஸ்டர் டோஸ்களுக்கும் தற்போது தேவை குறைந்துவிட்டது. மக்களும் சலிப்படைந்து விட்டனர்." - கோவிஷீல்ட் சிஇஓ

Published:Updated:
தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. வேகமாக பரவிய கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தத் தொடங்கிய பிறகே கொரோனா பரவலின் வேகம் குறைந்தது. அதன் பிறகு உலகம் முழுவதும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. இதற்கிடையில், இந்தியாவில் முதன்முதலாக புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சினுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தடுப்பூசி
தடுப்பூசி

அதில் பெரும்பாலும் கோவிஷீல்ட் தடுப்பூசியே பொதுமக்களுக்கு அதிகம் செலுத்தப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமும் உற்பத்தியை அதிகரித்து முழு வீச்சில் சப்ளை செய்தது. பின்னர், தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அரசு அனுமதியளித்தது. மேலும், கொரோனா தடுப்பூசி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுவிட்டது. இதனால், கொரோனா இந்தியாவில் குறைய தொடங்கியதும், அடுத்தடுத்து தடுப்பூசி போடும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்தது. அதைத் தொடர்ந்து உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியது. அதற்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அறிவித்தது. இருந்தாலும் தடுப்பூசி போட மக்கள் அதிகளவில் ஆர்வம்காட்டவில்லை.

கோவிட்-19
கோவிட்-19

இதுதொடர்பாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ அடார் பூனாவாலா, வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில், "2021 டிசம்பர் மாதம் முதல் தடுப்பூசி தயாரிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. அன்றைய காலகட்டத்தில் சில கோடி டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. இவற்றில் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. பூஸ்டர் டோஸ்களுக்கும் தற்போது தேவை குறைந்துவிட்டது. மக்களும் சலிப்படைந்து விட்டனர். வெளிப்படையாக சொன்னால் எனக்கும் கூட சலிப்பு ஏற்பட்டுவிட்டது" என பூனவல்லா தெரிவித்தார்.