Published:Updated:

மனித உயிர்களோடு விளையாடும் மருந்துக்கடைகள்... காரைக்காலில் காலாவதியான மருந்துகள் பறிமுதல்!

`` `படித்த எனக்கே இந்நிலை என்றால் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?’ என்று புகார் கொடுத்தார். இன்னும் பல கடைகளில் மருந்தாளுநர்கள் இல்லை. எனவேதான் ஆய்வுக்கு உத்தரவிட்டேன்.’’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல மருந்துக்கடைகளில் காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாற்று மருந்துகளைத் தங்கள் விருப்பத்திற்கு தருவதாகவும், இதனால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜாவுக்கு, பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தன.

மருந்துக்கடை
மருந்துக்கடை

மக்கள் உயிர் காக்கும் தொழிலில் இத்தகைய செயல்கள் தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, உடனே புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை உரிமம் வழங்கும் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை உரிமம் வழங்கும் அதிகாரி கார்த்திகேசன், மருந்து ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் காரைக்கால் பகுதியில் உள்ள பல மருந்துக்கடைகளில், கடந்த டிசம்பர் 10 - ம் தேதி திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். குறிப்பாக, காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள 'பாவா' மருந்துக்கடையில், காலாவதியான மருந்துகள் பலவற்றைக் கைப்பற்றினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

மருந்துக்கடை
மருந்துக்கடை

இதுபற்றி பாவா மருந்துக்கடை உரிமையாளர் ரியாஸ்அலியைச் சந்தித்து ' என்ன நடந்தது ?' எனக் கேட்டோம்.

"தமிழகம் உள்பட சுமார் 25 நகரங்களில் பாவா மருந்துக் கடைகள் கடந்த 50 ஆண்டுக்காலமாக மருத்துவ சேவை செய்து வருகின்றன. காழ்ப்புணர்ச்சியால் எங்களுக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்க, தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வது வழக்கமான நடைமுறைதான். எங்கள் கடையில் ஆய்வுசெய்த அதிகாரிகள், நாங்கள் தனியாக எடுத்துவைத்திருந்த, கடந்த மாதம் காலாவதியான மருந்துகளைக் கைப்பற்றி, அவற்றை விற்பனைக் கடையில் வைத்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்தி, அதை எங்களிடமே கொடுத்துச் சென்றுவிட்டார்கள்.

`யக்கோவ் ப்ரியங்கா... என்ன தனியா வந்திருக்கீங்க!' - `சூப்பர் சிங்கர்' திவாகரின் கல்யாண ஹைலைட்ஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலாவதியான மருந்துகளை எந்த மருந்துக்கடைகளிலும் விற்பனை செய்ய மாட்டார்கள். அவற்றை மருந்துக் கம்பெனியினர் திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய மருந்துகளைத் தந்துவிடுவார்கள்.இதனால் எங்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. எனவே, காலாவதியான மருந்துகளை விற்கவேண்டிய அவசியமே இல்லை" என்றார்.

மருந்துக்கடை
மருந்துக்கடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜாவிடம் இதுபற்றி பேசியபோது, "குறிப்பிட்ட தனியார் மருந்துக்கடையில் ஒருவர் குழந்தைக்கான மருந்து வாங்கியபோது, ஒரு மாதத்தில் காலாவதியாகும் மருந்தைத் தந்துள்ளனர். ஆனால், குழந்தைக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து தரவேண்டுமே என்று கேட்ட பின், ஓராண்டுக்குப் பின் காலாவதியாகக்கூடிய மருந்தைத் தந்துள்ளனர். அதே கடையில், மீண்டும் அவர் ஒரு ஊசி மருந்தை வாங்கியபோது, டாக்டர் எழுதியதைத் தராமல் லோக்கல் கம்பெனி மருந்தைத் தந்திருக்கிறார்கள். அவர் நேரிடையாக என்னிடம் வந்து, `படித்த எனக்கே இந்நிலை என்றால் படிக்காத மக்கள் என்ன செய்வார்கள்?’ என்று புகார் கொடுத்தார். இன்னும் பல கடைகளில் மருந்தாளுநர்கள் இல்லை. எனவேதான் ஆய்வுக்கு உத்தரவிட்டேன். இந்த ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது. விதிகளை மீறுவோர் சட்டப்படி நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்'' என்றார் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு