Published:Updated:

`ஏதோ எங்களால் முடிந்த உதவி!' - ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைக்கு வழங்கிய நண்பர்கள்

கொரோனா
கொரோனா

ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிடம் ஒப்படைத்தார் ஆல்பர்ட் சாலமன்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆல்பர்ட் சாலமன் என்ற அரசு ஊழியர், தன் நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டி வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Spread Positivity
Spread Positivity

இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2015-ல் ஓய்வுபெற்ற ஆல்பர்ட் சாலமன், தற்போது காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றுகிறார். காரைக்காலைச் சேர்ந்த இவருடைய மைத்துனர் ஜானிபேட்ரிக், தற்சமயம் அரபு நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் பணியாற்றுகிறார். அவர் மூலமாக மஸ்கட்டில் வாழும் காரைக்கால் நண்பர்களிடமும், `Team United' குழு நண்பர்கள் மூலமாகவும் மொத்தம் ரூ.5 லட்சம் நிதி திரட்டி, ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிடம் ஒப்படைத்தார்.

இதுபற்றி ஆல்பர்ட் சாலமனிடம் பேசினோம்.

``கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்தவண்ணம் இருப்பது வேதனை அளித்தது. அப்போதுதான், காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தவல்ல ஆக்சிஜன் செறிவூட்டிகள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது. கூகுள் மூலம் தேடியதில் கேரளாவில் உள்ள கொச்சியில் இசோன் டிரேடர்ஸ் (Ezone Traders) நிறுவனம் இத்தகைய செறிவூட்டிகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.

ஆல்பர்ட் சாலமன்
ஆல்பர்ட் சாலமன்

ஒன்றின் விலை ரூ.1,00,000. என் மைத்துனர் மூலம் மஸ்கட்டில் வாழும் காரைக்கால் நண்பர்களிடம்  நிதி திரட்டி, 5 செறிவூட்டிகளை வாங்கி காரைக்கால் ஆட்சியர் மூலம் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளோம். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு உதவியைச் செய்தது மனநிறைவைத் தருகிறது" என்றார்.

மீள்வோம்... மீட்போம்!

அடுத்த கட்டுரைக்கு