Published:Updated:

‘‘ஆளுநர் பொறுப்பு அலங்காரத்துக்கானதல்ல!”

கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்

கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்

‘‘ஆளுநர் பொறுப்பு அலங்காரத்துக்கானதல்ல!”

கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்
ஹைதராபாத்திலுள்ள நிஜாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (நிம்ஸ்) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனையின் கொரோனா வார்டுக்கு திடீரென்று விசிட் அடித்த தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சிகிச்சை பெறுபவர் களுக்கு நம்பிக்கையூட்டி வந்ததுதான் தெலங்கானா அரசியலில் இப்போது ஹாட் டாபிக்.

தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துவிட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டிவிட்டது. இந்தநிலையில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான அமைச்சர் கே.டி.ராமாராவ், “இந்த நோய்த் தொற்றைத் தடுக்க இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள்” என்றதுடன், “நாம் அதிக அளவில் பரிசோதனைகளை நடத்தினால் பரிசா கொடுக்கப் போகிறார்கள்?” என்று ஏடாகூடமாகப் பேச தெலங்கானா மக்கள் கொதித்துப்போயிருக் கிறார்கள். இந்தச் சூழலில் தமிழிசையின் ‘நிம்ஸ்’ விசிட், தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தெலங்கானா ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித் தோம். “தமிழிசை செளந்தரராஜன் அடிப்படையில் ஒரு மருத்துவர். அதனால் தனது மருத்துவ அனுபவம், தனது மருத்துவ நண்பர்களின் கருத்துகள், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள், பிற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் ஆராய்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்குப் பலமுறை கடிதங்கள் எழுதினார்.

கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்
கொரோனா வார்டில் தமிழிசை சௌந்தரராஜன்

‘பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். நோய்த் தொற்று அதிகரிக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தெலங்கானாவில் 20 சதவிகிதம் பேர் பழங்குடியினர் என்பதால், நடமாடும் பரிசோதனைக்கூடம் அமைத்து சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இக்கட்டான சூழலில், அரசு மருத்துவமனைகளுடன் சேர்த்து தனியார் மருத்துவமனைகளின் உதவியையும் பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் அரசின் வழிகாட்டுதலுடன் பரிசோதனை நடத்தலாம். அரசு மருத்துவமனைகளிலுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் கொரோனா பாதுகாப்புக் கவச உடை அளித்தால், அவர்கள் நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது கருத்துகளை ஏற்க முதல்வர் சந்திரசேகர ராவ் முன்வந்தபோதிலும், சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களால் ஆளுநர் சுட்டிக்காட்டிய பல விஷயங்கள் ஏற்கப்படவில்லை. அதனால்தான் மருத்துவர்களும் செவிலியர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உருவானது. 79 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், அதிகாரிகள் என 400-க்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானார்கள். நிலைமை விபரீதமாக மாறிவருவதை உணர்ந்ததால் ஆளுநரே மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார்’’ என்றனர்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனைத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘‘நோயாளி களுக்குச் சிகிச்சையளித்தபோது மருத்துவர்கள், செவிலியர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யிருக்கின்றனர். அவர்களைச் சந்திக்க நிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றேன். எனது ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டு, ‘உள்ளே செல்ல வேண்டாம்’ என சுகாதாரத்துறையினர் தெரிவித் தார்கள். என் பாதுகாவலர்களும் அனுமதிக்க மறுத்தார்கள். ‘ஆளுநர் பொறுப்பு என்பது அலங்காரத்துக் கானதல்ல. மக்களின் நலனுக்கானது. அரசுடன் இணைந்து செயல்பட்டு, மக்களுக்கு நலன் கிடைக்கச் செய்யும் பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்று எடுத்துச் சொல்லி வார்டுக்குள் சென்றுவிட்டேன்.

கொரோனா வார்டில் 32 வயது நிரம்பிய பெண் மருத்துவர் ஒருவரைச் சந்தித்தேன். ஒரு குழந்தை, விளையாட்டுப் பொருளை விழுங்கியதால் மூச்சுவிடத் திணறிய நிலையில் சிகிச்சைக்கு வந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரியாமல் சிகிச்சை அளித்ததால் அந்த மருத்துவருக்கும் கொரோனா பரவியுள்ளது. விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்தவருக்கு சிகிச்சையளித்தபோது இன்னொரு மருத்துவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

‘‘ஆளுநர் பொறுப்பு அலங்காரத்துக்கானதல்ல!”

இப்படி, பிறருடைய உயிரைக் காக்கும் பணியின்போது பாதிக்கப்பட்ட மருத்துவர்களிடம், ‘நீங்கள் தனியாக இருக்கவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; கவலைப் படாதீர்கள்’ என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். நாம் கொடுக்கும் நம்பிக்கையும் தைரியமும் பிற மருத்துவர்களுக்கும் மனதளவில் உறுதியைக் கொடுக்கும். அவர்கள் நம்பிக்கையுடன் நோயாளிகளைப் பாதுகாப்பார்கள்.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முதல்நிலை களப்பணியாளர் களாக உள்ளனர். மனோஜ்குமார் என்ற பத்திரிகையாளர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. காவல்துறையினரும் கொரோனா வுக்கு பலியாகியிருக்கின்றனர். முதல்வர் அலுவலகப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அவர்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism