Published:Updated:

‘என் தாயை மீட்டுத்தாருங்கள்’- காடுவெட்டி குருவின் மகன் கண்ணீர்

எம்.திலீபன்
‘என் தாயை மீட்டுத்தாருங்கள்’- காடுவெட்டி குருவின் மகன் கண்ணீர்
‘என் தாயை மீட்டுத்தாருங்கள்’- காடுவெட்டி குருவின் மகன் கண்ணீர்

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மகன் கனலரசன் தனது தாயை அவர்களது உறவினர்களிடம் இருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘என் தாயை மீட்டுத்தாருங்கள்’- காடுவெட்டி குருவின் மகன் கண்ணீர்

மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியானது. அந்தக் கடிதம் பொய்யானது என குருவின் மகன் கனலரசன் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார், மேலும், தன் தாய் சொர்ணலதாவை அவரின் உறவினர்கள் மிரட்டி வீட்டுக்குள் சிறை வைத்துள்ளதாகவும் மீட்டுத் தர டாக்டர் ராமதாஸ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் 

வீடியோவில் கனலரசன் தெரிவித்திருப்பது, 2 நாள்களுக்கு முன்பு தன் தாய் கையெழுத்திட்ட கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருப்பது பொய்யான கடிதம், தன் தாய்க்கு படிக்கத் தெரியாது எனவும், எனவே அவரிடம் அவரின் உறவினர்கள் மிரட்டி கையெழுத்து பெற்று அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், தந்தை குரு இறந்ததால் மன வேதனையில் இருந்த என் தாய் சென்னையில் உள்ள அவரின் அண்ணன் வீட்டுக்குச் சென்றார், அதன் பிறகு என்னிடம் சரியாகப் பேசுவதில்லை, போனில் தொடர்பு கொண்டால் தயங்கித் தயங்கிப் பேசுகிறார். இதனால் தனது அம்மாவின் உறவினர்கள்தான் அவரை மிரட்டி வீட்டில் சிறை வைத்துள்ளதாகவும் கனலரசன் வீடியோவில் வெளியிட்டுள்ளார், பா.ம.க  நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன் தாயைக் கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். காடுவெட்டி குரு இறந்த பிறகு அவரின் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் அறிங்கேறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.