பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காதல் சர்ப்ரைஸ்!

காதல் சர்ப்ரைஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் சர்ப்ரைஸ்!

காதல் சர்ப்ரைஸ்!

ண்ணாடி முன் நூறுமுறை ஒத்திகை பார்த்தும் காதலைச் சொல்ல முடியாமல் தடுமாறிய தலைமுறைக்கு பை பை! ‘காதலைச் சொல்றதுல எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, அதை வித்தியாசமா, சர்ப்ரைஸா, பிரமாண்டமா எப்படியெல்லாம் சொல்லலாம்னு பிளான் பண்றதுதான் இப்போ லவ்ல பெரிய புராஜெக்ட்’ என்று சிரிக்கிறார்கள் 90’ஸ் கிட்ஸ். ‘எங்களை மாதிரி சொல்லுங்க ப்ரோ’ என்று கெத்து காட்டும், சர்ப்ரைஸ் லவ் புரபோஸலில் கலக்கிய க்யூபிட் கில்லிகளின் அனுபவங்கள் இங்கே! 

ஸ்பைடர் மேன்... ஸ்மார்ட் மேன்!

காதல் சர்ப்ரைஸ்!

ரேஞ்சுடு மேரேஜிலும் சர்ப்ரைஸ் லவ் புரபோஸல் அத்தியாயம் எல்லாம் உண்டு! ஜேக்கப், டயனி இருவருக்கும் அரேஞ்சுடு மேரேஜ். நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தன் காதலைச் சொல்லியிருக்கிறார், ஜேக்கப். ‘`என்னதான் பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், அவங்களை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதை, எந்தளவுக்கு அவங்க எனக்கு ஸ்பெஷல் என்பதைச் சொல்லணும்னு தோணுச்சு. டயனிக்கு உயரமான இடத்தில் இருந்து இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும்னு ஒருநாள் சொல்லியிருந்தாங்க. அப்பவே, அப்படி ஓர் இடத்தில்தான் அவங்களுக்கு என் அன்பைச் சொல்லணும்னு நினைச்சிருந்தேன். ஊட்டி, கொடைக்கானல்னு வழக்கமான ஸ்பாட்டாக இல்லாமல், யுனீக்கா என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கட்டுமானப் பணியில் பயன்படுத்தும் கிரேன் ஞாபகத்துக்கு வந்தது. ‘கிரேன்ல ஏறி உயரப் பறந்துட்டே லவ் சொன்ன பெருமை உனக்கு வரப்போகுது ஜேக்கப்’னு மூளையில் ஃப்ளாஷ் அடிக்க, அருகில் இருந்த காவல்நிலையத்தில் படாத பாடுபட்டு அனுமதி வாங்கிட்டேன். கிரேனில் முதல்ல நான் மட்டும் ஒருமுறை ஏறி 100 அடி உயரம் சென்று பாதுகாப்பை உறுதிசெய்துகிட்டேன்’’ என்றவரை நிறுத்தி,  ‘`அந்த திகில் கலந்த ரொமான்டிக் நிமிடங்களை நான் சொல்றேன்’’ என்றார் டயனி.

காதல் சர்ப்ரைஸ்!

`` ‘உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வெச்சிருக்கேன்’னு வரச்சொன்னார். நான் போனதும், ‘மொட்டை மாடியில் சர்ப்ரைஸ் இருக்கு... லிஃப்ட்டில் ஏறு’ன்னு சொல்லி என் கண்களைக் கட்டி, என்னை கிரேனில் ஏத்தி மேல கூட்டிட்டுப் போயிட்டார். கண்களைத் திறந்தால், பூமியிலிருந்து 100 அடி உயர கிரேனில் நின்னுட்டிருந்தோம். தெருவிளக்குகள் எல்லாம் நட்சத்திரமாய்  மினுங்கிட்டிருந்தது. என்ன நடக்குதுன்னு நான் அந்த நிமிடத்தை உணர்றதுக்குள்ள ஜேக்கப் மோதிரத்தைப் பரிசளித்து, கீழே பார்க்கச் சொன்னார். ‘I love you, will you marry me?’ என்ற வாசகம் மெழுகுவத்திகளால் ஒளிர்ந்தது. கண்ணீரோட அவரைக் கட்டிப்பிடிச்சு நானும் என் காதலைச் சொல்லிட்டேன். ஸ்பைடர் மேன் மாதிரி இப்படி ஒரு திகில் புரபோஸல் செய்த ஸ்மார்ட் மேனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?!”

இது ரியல் ரெமோ சீன்!

காதல் சர்ப்ரைஸ்!

கஸ்டியனும் யாமினியும் நல்ல நண்பர்கள். யாமினியின் பிறந்தநாளன்று பிறந்திருக்கிறது அவர்களின் காதல்!

காதல் சர்ப்ரைஸ்!``எப்பவும் என் பிறந்தநாளுக்கு அகஸ்டியன்தான் முதல் ஆளாக வாழ்த்து சொல்லுவார். ஆனா, அந்த வருஷப் பிறந்தநாளன்று அவர்கிட்டேருந்து போன் வரவேயில்லை. ரொம்ப டென்ஷனாகி நானே போன் பண்ணினா, ‘மீட்டிங்ல இருக்கேன்’னு சொல்லி கட் பண்ணிட்டார். ஈவ்னிங் வரை கால் பண்ணவே இல்ல, ரொம்ப அப்செட் ஆகிட்டேன். ஏழு மணிக்கு போன் பண்ணி ஒரு ரிசார்ட்டுக்கு வரச்சொன்னார். அங்க போய் அரை மணிநேரம் காத்திருக்க, ‘ஸாரி, அந்த இடம் சரியில்ல... நீ பக்கத்தில் இருக்கும் ரிசார்ட்டுக்கு வந்திரு’ன்னு கூலா சொன்னார். எனக்கு அழுகையே வந்திருச்சு. கண்ணைத் துடைச்சுட்டு அந்த இடத்துக்குப் போனேன். இப்பவும் போன்தான் வந்தது. ‘அந்த டேபிள்ல மோதிரம் இருக்கு, எடுத்துக்கோ’ன்னு சொன்னார். என்ன சொல்றார், என்ன பிளான்ல இருக்கார்னு நான் யோசிச்சிட்டிருக்கும்போதே திடீர்னு அங்க வானத்துல 45 அடி உயரத்துல, 150 முறை கலர்ஃபுல் கிராக்கர்ஸ் வெடிச்சது. அந்த வாணவேடிக்கையில் நான் அப்படியே பிரமிச்சு என்னை மறந்து நிற்க, யாரோ பின்புறம் வந்து என் கண்ணைக் கட்டினாங்க” என்ற யாழினியைத் தொடர்கிறார் அகஸ்டியன்.

காதல் சர்ப்ரைஸ்!

“ ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் தன் லவ்வைச் சொல்றது மாதிரி நானும் புரபோஸ் பண்ண நினைச்சேன். அதுக்காக ஒருநாள் முழுக்க ரிகர்சல், செட் மேக்கிங்னு பிஸியா இருந்தேன். இவங்களுக்கு போன் பண்ணினா, `எங்க இருக்கே, என்ன பண்றே’ன்னு கேட்டுக் கேட்டே பிளானைக் கண்டுபிடிச்சிருவாங்கன்னுதான் போன் பண்ணாம இருந்தேன். வாணவேடிக்கை முடிந்ததும் என் ஃப்ரெண்ட்ஸ் யாமினியை வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு அழைத்து வந்து, கண்ணில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டாங்க. நான் பொக்கேயுடன் என் காதலைச் சொன்ன அந்த நொடி, வேற லெவல். என் ஹீரோயிக் புரபோஸல்ல திக்குமுக்காடி அவங்களும் `லவ் யூ’ சொல்லிட்டாங்க. அகஸ்டியன் ஹேப்பி அண்ணாச்சி!”

சர்ப்ரைஸ் நம்பர் 1, 2, 3!

காதல் சர்ப்ரைஸ்!

பாலாஜிக்கும் யுவராணிக்கும் வீட்டில் பார்த்துத் திருமணம் முடிவுசெய்திருந்தாலும், ஃப்ளாஷ் மாப் புரபோஸல் எல்லாம் செய்து அசத்தியிருக்கிறார் பாலாஜி. ``இவங்களை ஒரு நாள் கோயிலுக்கு வரச் சொன்னேன். தயங்கித் தயங்கித்தான் வந்தாங்க. கோயில் வாசலில் ஒரு பெரிய பாக்ஸ் வைத்து, ‘என்னோட கிஃப்ட்’னு சொன்னேன். அவங்க கொஞ்சம் மிரட்சியுடனே ஓப்பன் பண்ண, உள்ள இருந்து ஆர்ட்டின் வடிவ ஹீலியம் பலூன்கள் காற்றில் மேலெழுந்துவந்து, வானில் பறந்து பறந்து என் காதலைச் சொன்னது. வெட்கத்தில் எதுவுமே பேச முடியாம அவங்க என்னைப் பார்த்துச் சிரித்த அந்த நிமிஷம், நானும்   அந்த பலூன்களைப் போலவே காற்றில் மிதந்தேன். அன்னிக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்தான்’’ என்று பாலாஜி சொல்ல, ``மிரண்டுட்டேன்ங்க’’ என்று ஆரம்பித்தார் யுவராணி.

காதல் சர்ப்ரைஸ்!

``அடுத்து என்ன சர்ப்ரைஸ் பண்ணுவாரோன்னு அன்னிக்கு என்னை ஆனந்த அவஸ்தையை அனுபவிக்க வெச்சுட்டார். கோயில்ல இருந்து கிளம்பி தியேட்டருக்குப் போனோம். நாங்க உள்ள என்ட்ரி ஆனதும், திடீர்னு நாலு பேர் அவங்களோட சீட்ல இருந்து எழுந்துவந்து எங்க முன்னாடி டான்ஸ் ஆட, இவர் எனக்கு ரோஸ் கொடுக்க, நான் திக்குமுக்காடிப்  போயிட்டேன். அவர் கொடுத்த ரோஸை, திரும்ப அவர்கிட்டயே கொடுத்து, ‘மீ டூ’ சொன்னேன். அங்க இருந்தவங்க எல்லோரும் கைதட்டி வாழ்த்தினாங்க. அந்த நிமிஷமே திருமணம் முடிந்த ஒரு ஃபீல்! படம் பார்த்துட்டுக் கிளம்பினப்போ, ‘ரெஸ்டாரென்ட்ல சாப்பிடலாமா?’ன்னு எதார்த்தமா கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். பார்த்தா, அங்க எனக்காக கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்திருந்தார்’’ எனக் காதலுடன் பாலாஜியைப் பார்க்க, ‘ஆர் யூ ஓகே பேபி?’ எனக் கலாய்க்கிறார் பாலாஜி.

சு.சூர்யா கோமதி - படங்கள்: ஆ.வள்ளி செளத்ரி