Published:Updated:

``உணர்வுகள் இல்லாதவர்கள் அல்ல; வெளிப்படுத்தாதவர்களே ஆண்கள்!" #InternationalMensDay

Men's Day
News
Men's Day

சந்தோஷமோ, துக்கமோ எந்த உணர்வுகளையுமே பெண்களைப் போல ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

``பெண் மனசு ஆழம் என்று ஆம்பளைக்குத் தெரியும்; அது பொம்பளைக்கும் தெரியும்" என்றும் ``ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல, ஆழம் எது அய்யா? அந்த பொம்பள மனசுதான்யா" என்றும் புலம்பிக்கொண்டுப் பெண் மனதின் ஆழ அகலங்களைப் பற்றி ஆய்வுசெய்து கொண்டிருக்கும் ஆண்களே.... அட்டென்ஷன் ப்ளீஸ்!

Men's Day
Men's Day

``இந்த ஆண்கள் இருக்காங்களே... எங்களைப் புரிஞ்சிக்கவே மாட்டாங்க, நாங்க பேசுறத உணர்ச்சியே இல்லாத சிலை மாதிரி கேட்டுட்டு இருப்பாங்க, அவங்க ஃப்ரெண்ட்ஸ்தான் அவங்களுக்கு முக்கியம், உறவுகளவிட வேலைக்குதான் முக்கியத்துவம் தருவாங்க, நாங்க ஏதாவது அறிவுரை சொன்னா கூட கேட்டுக்க மாட்டாங்க..." - என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்லும் பெண்களே..." நீங்களும் கொஞ்சம் கவனிங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்றைக்கு ஆண்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசுவோமா?

`ஏன்.. இன்னைக்கி மட்டும் என்ன புதுசா அக்கறை? எப்போதும் கண்டுக்கவே மாட்டீங்க' என்கிறீர்களா ஆண்களே? வாஸ்தவம்தான். இன்னைக்கி ஏதோ `ஆண்கள் தினமாமே

Men's Day
Men's Day

``ஆண்கள் ஏன் இப்படிலாம் செய்யறாங்க?" என்று சில கேள்விகள் பெண்களிடம் காலங்காலமாக இருந்துவருகின்றன. சில நேரங்களில் தாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்று ஆண்களுக்கே புதிராகத்தான் இருக்கும். அத்தகைய கேள்விகளுக்குத்தான் இப்போது விடை காணப்போகின்றோம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன்-பார்பரா பீஸ்-ங்கிற தம்பதி தங்களோட ``ஆண்கள் ஏன் கேட்பதில்லை" புத்தகத்துல இந்த வித்தியாசமான கேள்விகளுக்கான பதில்களை அழகா கொடுத்திருக்காங்க. அப்படி என்னதான் ஆண்களோட சைக்காலஜின்னு பார்த்துடலாமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1) ஆண்கள் ஏன் தங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்துவதில்லை?

Men's Day
Men's Day

சந்தோஷமோ, துக்கமோ எந்த உணர்வுகளையுமே பெண்களைப்போல ஆண்கள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. இதனாலேயே ``அவனுக்கு இதயமே இல்ல, எந்த உணர்வுமே இல்ல" போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளைப் பெண்கள் ஆண்களை நோக்கி எறிகிறார்கள்.

பெண்கள் சொல்வதுபோல் ஆண்களுக்கு உணர்வுகளே இல்லையா? - ``உண்மையில் சொல்லப்போனால் ஆண்களுக்குதான் உணர்வுகள் அதிகம்". ஆனால், ஆதிகாலத்தில் இருந்தே தனது உணர்வுகளைக் காட்டிக் கொடுத்துவிடாதபடி உணர்ச்சியற்று இருப்பதுதான் ஆணின் உயிரியல் இயல்பாக இருந்துவருகிறது. உணர்ச்சியற்ற முகமூடியை அணிந்து கொள்வதால் தன் சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உணர்வு ஆணுக்கு ஏற்படுகிறது.

ஆனால், இதற்காக ஆண்கள் உணர்வுகளையே அனுபவிப்பதில்லை என்று கூறிவிட முடியாது. அவர்களும் பெண்களைப் போலவே உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், வெளிக்காட்டாமல் தவிர்க்கிறார்கள் என்பதே உண்மை!

2) ஆண்கள் ஏன் அறிவுரைகளை வெறுக்கிறார்கள்?

Men's Day
Men's Day

``நான் அவனோட நல்லதுக்குத்தானே சொல்றேன். அறிவுரை சொல்றதுக்கான உரிமைகூட எனக்கில்லையா? அவன் சொல்றத நான் ஏத்துக்குற மாதிரி நான் சொல்றத அவனால ஏன் ஏத்துக்க முடியல?" - இதுவும் பெரும்பாலான பெண்களின் புலம்பல்தான்!

ஓர் ஆண், தன் சொந்தப் பிரச்னைகளைத் தானே தீர்த்துக் கொள்ளும் திறமை தனக்கு இருக்கிறதென்றும், தன் பிரச்னைகளைப் பற்றி மற்றவருடன் பேசுவதால் அவர் மீது தன் பாரத்தை ஏற்றிவிடுவதாகவும் நினைக்கிறான். இதனாலேயே தன் பிரச்னைகளைக் கூறி அவன் யாரிடமும் அறிவுரைகளைக் கேட்க விரும்புவதில்லை. ஒரு நல்ல தீர்வைத் தருவான் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் தன் மிகச்சிறந்த நண்பனிடம் கூட அவன் தன் கஷ்டத்தை வெளிப்படுத்த மாட்டான்.

எனவே, ஆண்கள் தானாக வந்து கேட்காவிட்டால் தவிர அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டாம். இதுவே அவர்களின் பிரச்னையைத் தீர்க்க நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

3) ஆண்கள் ஏன் தங்கள் ஆண் நண்பர்களுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள்?

ஆண்கள்
ஆண்கள்

``ஆண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்குத் தரும் முக்கியத்தை வேறு யாருக்கும் தர மாட்டார்கள். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் ஒரு நீண்ட, வலிமையான நட்புறவைத் தொடர்வதில் தேர்ந்தவர்கள். இதனால்தான் திருமணம் ஆனாலும் கூட தங்கள் சிறு வயது நண்பர்கள்வரை யாரையும் விட்டு விலகாமலே இருப்பார்கள். நான்கு நண்பர்கள் கூடிவிட்டால் போதும். அவர்களுக்குப் புற உலகே நினைவில் இருக்காது என்பதுதான் உண்மை"

இந்த நட்பு பாராட்டும் பண்பு ஆதிகாலத்திலேயே ஆணுக்கு ஏற்பட்ட ஒரு குணம். ஆதிகாலத்து மனிதனின் முதல் கடமை வேட்டையாடுதல். வேட்டையாடும்போது அவனைவிட பெரிய வலுவான யானை, ஒட்டகம் போன்ற விலங்குகள் அகப்படுவதுண்டு. இதனால் அவன் வெளியே செல்லும்போது தனியே இல்லாமல் ஆண்கள் குழுவுடனே சென்றுகொண்டிருந்தான். இதனால் ஆண்களோடு சுற்றுவது அவனது குணமாகவே மாறியது.

நாகரிகம் வளர்ந்து வேட்டையாடுதல் நின்றுபோன பிறகு ஆண்களின் இந்தக் குழு மனப்பான்மை கால்பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளாக உருவெடுத்தன. இதனாலேயே இந்தப் போட்டிகளை ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். ஆக, ஆணுக்கு தன் நண்பர்கள் கூட்டத்தோடு சுற்றும் பழக்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டதால் அதை மாற்றுவது கடினம் பெண்களே!

4) ஆண்கள் ஏன் உறவுகளைவிட வேலைக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்?

Men's Day
Men's Day

``நிம்மதியா இருக்கலாம்னுதானே வெளியில வந்தோம். இங்க வந்தும் உங்க வேலையப் பத்திதான் பேசணுமா? பேசாம உங்க வேலைய கட்டிட்டே அழுங்க". - திருமணமான பெரும்பாலான பெண்களின் புலம்பல்தான் இது!

ஓர் ஆண் எப்போதும் தன் வேலை மற்றும் சாதனையை அடிப்படையாக வைத்தே தன்னை விளக்குகிறான். ஆண்-பெண் மதிப்பீடுகள் பற்றி நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளுமே கூறுவது என்னவென்றால், உலகில் உள்ள ஆண்களில் 70-80 சதவிகிதம் பேர் தங்கள் வேலையைத்தான் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பாகம் என்று கூறுகிறார்களாம். ஆனால், பெண்கள் குடும்பத்தைதான் தங்கள் வாழ்வின் முக்கிய பாகமாக நினைக்கிறார்கள்.

ஒரு பெண் தன் உறவுகளில் சந்தோஷமின்றி இருந்தால் அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது. ``ஓர் ஆண் தன் வேலையில் சந்தோஷமின்றி இருந்தால் அவனால் தன் உறவுகளில் கவனம் செலுத்த முடியாது". இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் இருவரின் தனிப்பட்ட மூளை அமைப்புதான். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதால் நீங்களும் உங்கள் துணைவரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

5) ஆண்கள் ஏன் தொலைக்காட்சியில் சேனல் விட்டு சேனல் தாவுகிறார்கள்?

Men's Day
Men's Day

ரிமோட் கன்ட்ரோலைப் பயன்படுத்தி தொலைக்காட்சியில் சேனல் விட்டு சேனல் தாவுவதுதான் ஆணிடம் பெண் அதிகம் வெறுக்கும் விஷயங்களில் ஒன்று. உண்மையில் சொல்லப்போனால் எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் ஆண்கள் பெண்களைப் போல் கூர்ந்து கவனிப்பதில்லை. அவர்களின் கண்கள் மட்டும்தான் திரையில் இருக்குமே தவிர சிந்தனை வேறு ஏதோ விஷயங்களில்தான் இருக்கும். அப்போது அவனால் எதையுமே கேட்க முடியாது. இந்த நேரத்தில்தான் நம்ம பெண்கள் அவனிடம் சென்று ஏதாவது முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுவார்கள். அவனிடமிருந்து அதற்குச் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் பிரச்னை பெரிதாகும்.

எனவே பெண்களே, ஆண்களின் முன்னோர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாறைமேல் உணர்ச்சியின்றி அமர்ந்து தொடுவானத்தை வெறித்துக் கொண்டிருந்தவர்கள்தான். எனவே, ஆண்களுக்கு இது இயல்பானதுதான். அந்த நிலையில், அவர்கள் சௌகர்யமாக இருப்பார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

6) பெண்கள் ஷாப்பிங் செய்வதை ஆண்கள் ஏன் வெறுக்கிறார்கள்?

Men's Day
Men's Day

பெண்களைப் பொறுத்தவரை ஷாப்பிங் என்பது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. வாங்குகிறார்களோ இல்லையோ பெண்களுக்கு ஷாப்பிங் புத்துணர்வு ஊட்டுவதாகவும் ஓய்வு தருவதாகவும் இருக்கிறது. அதனால் அவர்கள் எந்த இலக்கும், நோக்கமும் இல்லாமல் கடைகளைச் சுற்றிவருவதை விரும்புகிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட ஷாப்பிங் ஆண்களுக்கு 20 நிமிடங்களில் டென்ஷனை வரவழைத்துவிடும். ஒர் ஆணைப் பொறுத்தவரை ஒரு நோக்கம், இலக்கு, நேர நிர்ணயம் இருந்தால்தான் எதிலும் உற்சாகமாகச் செயல்பட முடியும். இதனால்தான் இலக்கற்ற பெண்களின் ஷாப்பிங் ஆண்களுக்குப் பிடிப்பதில்லை.

இதுபோன்ற ஆண்களின் ஒவ்வொரு வேறுபட்ட குணங்களின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. இதை அறிந்துகொண்டாலே ஆண்கள் மீது நமக்கு ஏற்படும் தவறான புரிந்துணர்வைத் தவிர்க்கலாம்.

மேலும், ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி என்பது பற்றி மனநல ஆலோசகர் வசந்தி பாபுவிடம் பேசினோம்.

மனநல ஆலோசகர் வசந்தி பாபு
மனநல ஆலோசகர் வசந்தி பாபு

``ஆண்களின் சிந்திக்கும் பார்வை, முடிவெடுக்கும் திறன் எல்லாமே பெண்களிடமிருந்து வேறுபடுபவை இதனாலேயே இருவரின் கருத்துகளும் ஒத்துப்போவதில்லை. இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பெண்கள் எப்போதும் உணர்ச்சிகரமானவர்கள். எந்தவொரு முடிவையும் விரைவில் எடுத்துவிடுவார்கள். ஆனால், ஆண்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் பொறுமையானவர்கள். எந்த முடிவையும் மெதுவாகத்தான் எடுப்பார்கள். ஆனால், அதில் உறுதியாக இருப்பார்கள். ஒர் ஆண் தன் கட்டுப்பாட்டில் இருக்கவே உணர்வுகளை மறைத்துக்கொள்கிறான். உணர்ச்சிவசப்படுவது என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் கட்டுப்பாட்டை இழப்பது. `ஆம்பள புள்ளையா நடந்துக்கோ', `ஆம்பள புள்ள அழலாமா' என்றெல்லாம் கூறி இந்தச் சமூகம் அவர்களிடத்தில் இந்த நடத்தைகளை வலுயுறுத்தி வந்திருக்கிறது

ஆனால், உண்மையில் தன் குடும்பத்துக்கு ஆண் தரும் அரவணைப்பு என்பது இன்றியமையாதது. தங்கள் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் கூட அதை நிதானமாகக் கையாளும் திறன் ஆண்களிடம் உள்ளது. இதனால்தான் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை ஒரு சூப்பர் ஹீரோவாகத் தெரிகிறார்.

ஆண்களுக்கு என்று சில குணங்கள் இயல்பாகவே இருக்கும். அவை பெண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஆண்களின் அந்தப் பண்புகளுக்கு காரணம் அவர்களின் முன்னோர்களும், ஆண்களின் மூளை அமைப்பும்தான். இதைப் பெண்கள் புரிந்துகொண்டால் இல்லறம் `நல்லறம்' ஆகும்" என்றார்.

Men's Day
Men's Day

ஆக, எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் காந்தத்தில் அவைதானே ஈர்த்துக்கொள்கின்றன! அதுபோல் மனங்கள் ஒன்றான பிறகு குணங்களைப் பற்றி ஏன் விவாதம்?

அனைவருக்கும் ப்ளஸ், மைனஸ் என்று இரு பண்புகளும் கலந்தே இருக்கும். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வரும் ஆண்களின் மைனஸையும் சேர்த்து நேசிப்பதிலேயே உங்கள் அன்பு மேம்படுகிறது.

எனவே, பெண்களே... ஆண்களைப் புரிந்துகொள்ள முயல்வோம். இதுவே ஆண்கள் தினத்தில் நாம் அவர்களுக்குத் தரும் சிறந்த பரிசாக இருக்கும். ஆண்கள் அனைவருக்கும் `இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துகள்!'