Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெர்சிடீஸ் - மெர்சல் கார்கள்.... AMG GT R & AMG GT Roadster!

இந்த ஆண்டு தொடர்ச்சியாக AMG கார்களை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது, ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம். இந்நிலையில் AMG GT Roadster (2.19 கோடி ரூபாய், இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) மற்றும் AMG GT R (2.23 கோடி ரூபாய், இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகிய இரண்டு ஹை-பெர்ஃபாமென்ஸ் AMG கார்களை அந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. Green Hell என ரேஸ் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் Nürburgring-ல் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில், GT3 காருடன் கலந்து கொண்டு, பட்டம் வென்றது மெர்சிடீஸ் பென்ஸ். மேலும் சவாலான Nürburgring ரேஸ் டிராக்கில், ''ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டதில் வேகமான கார்'' என்ற சாதனையும் இந்நிறுவனம் ஒருசேரப் படைத்திருக்கிறது.

மெர்சிடீஸ்

இப்படிப்பட்ட GT3 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் GT R கார் மட்டும் சோடை போகுமா என்ன? டெல்லியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில், AMG டிரைவரான Christian Hohenadel, இந்த காரை ஓட்டினார். 5.14 கி.மீ தூரம் கொண்ட ஒரு லேப்பை, வெறும் 2.09.853 நிமிடத்திலேயே கடந்ததால், BIC-ல் புதிய லேப் ரெக்கார்ட்டைப் படைத்திருக்கிறது மெர்சிடீஸ் AMG GT R. இவ்வளவு வேகத்துக்கும், அந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 4.0 லிட்டர், ட்வின் டர்போ, V8 பெட்ரோல் இன்ஜின்தான் காரணம். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 585bhp பவர் மற்றும் 70kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. எனவே 0 - 100கி.மீ வேகத்தை வெறும் 3.6 விநாடிகளிலேயே எட்டிப்பிடிக்கும் AMG GT R, அதிகபட்சமாக 318 கி.மீ வேகம் செல்லும் என்கிறது மெர்சிடீஸ். 

AMG GT R

 

தனது GT3 ரேஸ் காரில் இருந்த டபிள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பை, வழக்கமான சாலைக்கு ஏற்ப மாற்றியமைத்து, AMG GT R காரில் பொருத்தியுள்ளது மெர்சிடீஸ். எனவே இந்த காரும், ரேஸ் காரைப் போல ஹேண்ட்லிங்கில் அசத்தும் என நம்பலாம். AMG Dynamic Select வசதியும் இருப்பதால், Comfort, Sport, Sport Plus ஆகிய மூன்று சஸ்பென்ஷன் டேம்பிங் முறைகளில் தேவைக்கேற்ப செலக்ட் செய்து காரை ஓட்டலாம். இதனுடன், காரின் ஸ்டீயரிங் செட்-அப்பிலும் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது 50 வருட மெர்சிடீஸ் AMG வரலாற்றில், ரியர் வீல் ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருக்கும் முதல் மாடல் AMG GT Rதான். இதனுடன் காரின் வேகத்துக்கு ஏற்ப, ஸ்டீயரிங் ஃபீட்பேக்கை மாற்றக்கூடிய Speed Sensitive Variable Ratio Rack இடம்பெற்றுள்ளதால், ஸ்டீயரிங்  ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹை-பெர்ஃபாமென்ஸ் கார்

 

AMG GT Roadster மாடல், பார்ப்பதற்கு GT R காரைப் போலவே இருந்தாலும், இரண்டுக்கும் கணிசமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கே இருப்பதும், M177 என்ற குறியீட்டு எண்ணைக் கொண்டிருக்கும் அதே 4.0 லிட்டர், ட்வின் டர்போ, V8 பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியே என்றாலும், இது 469bhp பவர் மற்றும் 63kgm டார்க்கை வெளிப்படுத்தும் விதத்தில் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. Drop-Top வகை ரூஃப்பைக் கொண்டிருக்கும் AMG GT Roadster காரில், ரியர் வீல் ஸ்டீயரிங் இல்லை என்பதைத் தாண்டி, GT R காரின் மெக்கானிக்கல் பேக்கேஜ்தான் இங்கும் தொடர்கிறது. ‘Beast of the Green Hell’ எனச் செல்லமாக அழைக்கப்படும் AMG GT R, போர்ஷே 911 Turbo மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் Vantage V12 கார்களுடன் போட்டியிடுகிறது. இதுவே AMG GT Roadster என்றால், அது போர்ஷே 911 Carrera S Cabriolet மற்றும் ஜாகுவார் F-Type ஆகிய கார்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement