Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டிக்கி நோட்ஸ், சுவரில் சித்திரம்... பாசிட்டிவ் எனர்ஜிக்கான டிப்ஸ்! #MorningMotivation

இது அட்வைஸ் தரும் பதிவு அல்ல.

ஸ்கூல்ல ஹோம்வொர்க், காலெஜ்ல அஸைன்மெண்ட், ஆஃபிஸ்ல டார்கெட், காதல், ப்ரேக் அப், கடன், ட்ராஃபிக், பணம், பதவி, ப்ராஜக்ட், ப்ரோக்ராம், பொறாமை, வஞ்சம், எரிச்சல், புலம்பல், டார்ச்சர் அது இதுனு ஒரு மனுஷன ஒரு நாளைக்கு எட்டுத்திக்கும் நெகட்டிவ் எனர்ஜி சூழ்ந்து வெறியேற துரத்துகிறது.  இந்தநாளை முழுக்க முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியுடன் துவங்க நினைத்தால் உங்களுக்காக சில கள வேலைகள் காத்திருக்கின்றன. இதோ;

Morning Motivation

உங்கள் தெருமுனையில் இருக்கும் ஒரு ஸ்டேஷனரி கடைக்கு செல்லவும். அங்கு ”ஸ்டிக்கி நோட்ஸ்” என்று கேட்டால் கடைக்காரர் சில கலர் கலர் சீட்டுக்களை, பலதரப்பட்ட சைசுகளில் எடுத்து உங்கள் முன்  வைப்பார். அதில் எதை எடுக்கலாம் என்று யோசிக்காமல் ஒவ்வொரு கலரிலும், சைசிலும் ஒன்றை வாங்கி வரவும். உங்கள் வீட்டில் குட்டீஸ் இருந்தால் அவர்களிடத்தில் ஸ்கெட்ச் பென்சிலை கடன் வாங்கிக்கொள்ளலாம். ஆகையால் காசை வீணடிக்காமல் நேரே வீட்டுக்கு வரவும்.

உங்கள் வீட்டில் உங்கள் கண் பார்வைக்கு அதிகம் படும் இடம் எதுவென்று கண்டுபிடியுங்கள்? அது கிட்சனா? பெட்ரூமா? பாத்ரூமா? இல்லை, சுவர்கள்!

வீடு முழுக்க நிறைந்து கிடப்பது சுவர்கள் மட்டுமே. சிலர் வீட்டுச் சுவர்கள், குடும்ப புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சிலரது வீட்டுச் சுவர்களில் ”ஓம்” “சுபம்” “லாபம்” என்று மஞ்சள் பூசப்பட்டிருக்கும். சிலர் வீட்டு சுவர்களில் வாண்டுகள் மார்டன் ஓவியங்களால் அலங்கரித்திருப்பர். அந்த சுவர்தான் இப்பொழுது நம் மைண்ட். மொட்டையான ஒரு சுவரைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுக்கு பிடித்த அறையில் இருக்கவேண்டும் அல்லது அதிகம் பார்க்கும் சுவராக இருக்கவேண்டும்.

பெரிய துண்டு சீட்டைக் கிழித்து உங்கள் பெயரை உங்கள் கையெழுத்தில் அழகாக எழுதி, அந்த சுவரின் மையத்தில் ஒட்டி வைக்கவும்.

அதற்குப் பிறகு :

#உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மிகவும் பிடித்த நபர்களில் பெயர்கள்

#வாழ்வின் அங்கமாக மாறிய பொருட்களின் பெயர்கள்

#டைரிக் குறிப்பில் எழுதப்பட்ட மறக்கவே முடியாத நாள்கள்

#பிடித்த சின்ன சின்ன விஷயங்கள்

#பக்கத்து வீட்டு நாய்குட்டி

#மிகவும் பிடித்த திரைப்படங்களின் பெயர்கள்

#மறக்கமுடியாத உறவுகள்

#பிறரிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்கள்

#உங்களுக்குள் மாற்றங்களைக் கொண்டுவந்த சில விஷயங்கள்

#நீங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைக்கும் நபர்

#விரும்பிப் படித்த புத்தகங்கள்

#முக்கியமான நண்பர்களின் பெயர்கள்

#முதன்முதலில் சமைத்த உணவு

#அம்மாவின் ஸ்பெஷல் உணவுகள்

#உங்கள் ஃபோன், டேப்லெட், லேப்டாப், வாட்ச், கேமரா போன்ற கேட்ஜெட்ஸ் பெயர்கள்.

#கரியரின் முக்கிய நிகழ்வுகள்

#ஆசைகள்

#பேஷன்

#பத்து வருடங்கள் கழித்து என்னவாக இருக்க நினைக்கிறீர்கள்..

என்று முழுக்க முழுக்க பாசிடிவ் நோட்களால் அந்த மொட்டையான சுவரை நிரப்புங்கள். அவசரமே இல்லை. பொறுமையாக நேரம் எடுத்து, யோசித்து எழுதி ஒட்டிவைக்கவும். சில நாள்களில் அந்த சுவர் மஞ்சல் நிற நோட்ஸ்களால் நிரம்பி வழியவேண்டும்! ஆனால், பிடிக்காத ஒரு சின்ன விஷயத்தைக்கூட அதில் எழுதவே கூடாது. ஸ்ட்ரிக்ட்லி நோ!

பிறகு, பல வண்ணங்களில் வாங்கிவந்த சீட்டுகளை எடுத்து - பிடித்த கோட்ஸ்களை அழகாக எழுதுங்கள். அதை காலை கண் முழித்ததும் பார்க்கும் வகையில் எங்கேயாவது ஒட்ட வேண்டும். அது “குட் மார்னிங்... ஹேவ் எ வொண்டர்ஃபுல் டே அஹெட்” போன்ற ஒருவரி மோடிவேஷனாகக் கூட இருக்கலாம். நீங்கள் செடி வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக காலையின் அவசரத்தில் தண்ணீர் ஊற்ற மறக்க நேரிடும்.

ஆகையால், நீங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது கடைசியாக பார்க்கும் இடம் எதுவென்று கண்டறியுங்கள். ’நான் கண்ணாடியைத்தான் கடைசியாகப் பார்ப்பேன்’ என்றால் கண்ணாடியில் “ஆசையாய் வாங்கிய செல்ல செடிக்கு தண்ணீர் ஊற்றவும்” போன்ற கஜினி நோட்சை ஒட்டவும்.

குளித்துவிட்டு ஆடை அணியும் ட்ரெஸ்ஸிங் டேபிள் போன்ற இடத்தில் “வாவ், யூ லுக் ஸோ பியூட்டிஃபுல்”, “வாவ்.. என்ன அழகு எத்தனை அழகு..” மாதிரியான பொய்களை வெட்கமின்றி எழுதி ஒட்டுங்கள். அதே போல்… மாலை வீட்டுக்குச் சேர்வாக வரும்போது கதவில் “நெவர் கிவ் அப்”, “இந்த நாளின் ஸெகண்ட் ஹாஃப் உங்களை சந்தோஷமாக வரவேற்கிறது” போன்ற துண்டுச் சீட்டுகளை ஒட்டிவைய்யுங்கள்.

இன்னும் பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா? “மேக் சம்வொன் ஸ்மைல் டுடே” “யாரேனும் ஒருவரது சிரிப்புக்கு இன்று காரணமாக இரு” என்று எழுதி ஒட்டிவைத்துக்கொள்ளவும். அந்த நாள் இறுதியில் உங்களையே நீங்கள் ”அட்லீஸ்ட் ஒருவரையாவது சிரிக்க வைத்தோமா” என்று கேட்டுப்பாருங்கள்!

இது உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த மாற்றத்தையும் இதில் நீங்கள் எழுதலாம்!

மகிழ்ச்சி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement