அன்பால் இந்த உலகை வசப்படுத்திய புனிதர் அன்னை தெரசா பிறந்த நாள் பகிர்வு!

அது கொல்கத்தா நகரின் ஆதரவற்றோர் இல்லம். அங்குள்ள நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக கொல்கத்தா நகரெங்கும் சென்று நன்கொடை பெறுவது அவர்களின் வழக்கம். அப்படி ஒருநாள் அந்த பெண்மணியும் நன்கொடை பெரும் பொருட்டு வீதி வீதியாக ஏறி இறங்குகிறாள். கடைசியாக ஒரு கடைக்காரரிடம் தங்கள் இல்லத்தின் பெயரைச் சொல்லி அங்குள்ள தொழுநோயாளிகளுக்காக நன்கொடை வாங்க கையை நீட்ட, அந்த கடைக்காரர் காறி அவர் கைகளில் உமிழ்ந்து விடுகிறார். அதை கைகளில் வாங்கிய அந்த பெண்மணி, இந்த நன்கொடை எனக்கு போதும். ஆனால், எங்களின் இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு வேறு ஏதாவது தரமுடியுமா? என்று முகம் கோணாது கேட்க, காறி உமிழ்ந்த அந்த மனம் கூனி குறுகிப் போய் அந்த இல்லத்துக்குத் தன்னால் ஆன உதவியை செய்து அந்தப் பெண்மணியை வாழ்த்தி அனுப்புகிறது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்“ என்பதற்கேற்ப அன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி வேறு யாருமல்ல "புனிதர் அன்னை தெரசா " அவர்கள்தான். 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்த இவருக்கு இது 107-வது பிறந்த நாள் .

தற்போதைய மெசபத்தோமியா நாட்டின் ஸ்காப்ஜி நகரில் பிறந்த இவரின் இயற்பெயர் "ஆக்னஸ் கொன்சகா பொஜாக்சியு". தன்னுடைய 12-வது வயதிலேயே, பிறப்பே ஏழைகளுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்த இவர் லோரேட்டோ கன்னியர் சபையில் சேர்ந்தார். சேவை செய்யும் பொருட்டு இந்தியாவை விரும்பி ஏற்ற இவர் கொல்கத்தாவின் சாலையோர தொழுநோயாளர்களைக் கண்டு மனம் தாங்காது துடிக்க, அவர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வின் லட்சியமாக்கினார். 

ஒவ்வொரு முறையும் சாலையில் கிடக்கும் பிச்சைக்காரர்களைக் கடந்து போகவே முகம் சுளிக்கும் நம் மத்தியில், தொழுநோயாளிகளை அன்போடு ஏற்று பணிவிடை செய்துவந்த இவர், தொழுநோய் உங்களுக்கும் பரவி விடும் என்று எல்லோரும் எச்சரித்த போதும் அதை அன்போடு கடந்து அந்த தொழுநோயாளிகளின் வாழ்வில் புது மாற்றத்தை தந்தார்.

இவரின் இந்த அரிய சேவைக்காக இவருக்கு வழங்கப்பட்ட  "அமைதிக்கான நோபல் பரிசும்", இந்தியாவின் மிக உயரிய விருதும், இதுவரை வெறும் 45 பெருக்கே வழங்கப்பட்டுள்ளதுமான "பாரத ரத்னா" விருதும் இவரை அலங்கரிக்கத் தவறவில்லை. ஒருமுறை ஐ.நா சபையின் தலைவராக இருந்த பான் கீ மூன் இந்தியாவில் அன்னை தெரசாவை சந்தித்தபோது, அவரின் எளிமையும் அன்பான குணமும் அவருக்கு பெரும் வியப்பை அளித்தன. இவ்வளவு விருதுகளை தனதாக்கிக் கொண்ட இவர் இன்றளவும் டிராம் வண்டிகளிலே பயணிப்பதைக் கண்டு தன் காரை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அன்னை தெரசாவோ அந்தக் காரையும் விற்று அந்த பணத்தையும் தொண்டு நிறுவனத்தின் நிதியில் சேர்த்துக்கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின்  அதிசயமாக பார்க்கப்பட்ட இவர்  1995-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி தன் சேவையை இந்த உலகில் இருந்து முடித்துக்கொண்டார். எனினும் இவருக்கு கடந்த வருடமே புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கத்தோலிக்க திருச்சபை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!