பிக் பாஸ் மற்றும் சில வரலாற்று செய்திகளின் அகம் இது! #Video

பிக் பாஸின் ஆரம்பம் தெரியாமலே பிக் பாஸ் புள்ளிவிவரங்கள் சமூக வலைதளங்கள் வலம் வருகின்றன. பிக் பாஸ் மட்டுமல்ல. வரலாறு சில சமயங்களில் தவறாகவே புகட்டப்பட்டிருக்கிறது. வரலாற்றை எப்படியெல்லாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். ஒரு சில நேரங்கள் பொய் அதிகம் கூறப்பட்டால் உண்மையாகிவிடும் என்பார்கள். ஆனால் பொய் எப்போதும் பொய் தான். அதைத்தான் இந்த வீடியோவில் கிண்டலாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெயச்சந்திரன்.

விகடன் டிவியின் ஜெய் கி பாத் நிகழ்ச்சியில் வாரம் ஒரு டாபிக்கை தனக்கே உரிய ஸ்டைலில் பதிவு செய்வார் ஜெயச்சந்திரன். ஒருபுறம் பிக் பாஸ் எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அது சர்வைவர் என்ற நிகழ்ச்சியின் காப்பி என எழுந்த சர்ச்சைக்கு பதில் என்ன? ஷில்பா ஷெட்டி பங்குபெற்ற பிக் பிரதர் நிகழ்ச்சி ஏன் விரைவாக முடிக்கப்பட்டது என பிக் பாஸ் வரலாறு கூறுகிறார்.

இன்னொருபுறம் தவறாக கூறப்படும் வரலாறு குறித்து பேசுகிறார். ஜார்ஜ் வாஜிங்டனின் பல் மரத்தால் ஆனது, ஆம்ஸ்ட்ட்ராங் நிலவுக்கு செல்லவில்லை அது ஹாலிவுட் போட்ட செட், இலங்கையில் தேயிலை தோட்டத்துக்கு சென்றவர்கள் தான் தமிழர்கள், வாரணசி தான் இந்தியாவின் பழமையான நகரம், மகாத்மா காந்தி ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறார், மில்கா சிங் 1960ம் ஆண்டு ஒலிம்பிக்கில் திரும்பி பார்த்ததால் பதக்கம் இழந்தார் என்று வரிசையாக நாம் படித்த நிலையபிள் சோர்ஸ் வரலாறுகள் பொய் என உண்மையான வரலாறு கூறுகிறார்.

வீடியோ வழியே வரலாற்றின் அகம் காணும் ஜெயச்சந்திரன் கூறும் தகவல்கள் ''வரலாறு முக்கியம் அமைச்சரே'' எனக்கூறும் ரகம்.

இந்த கேள்விகளுக்கு பதில் தேட வீடியோவ மறக்காம பாருங்க!!!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!