Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துக்கத்தைக் கடக்கும் ஐந்து நிலைகள்... இதுவும் கடந்து போகும்! #NationalGriefAwarenessDay

இறப்பு யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. எல்லோரும் ஒருநாள் இறந்துவிடத்தான் போகிறோம். ஆனால் யாராலும் இதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திருமணங்களுக்குப் போவதை விட, “ஒரு மனிதனின் இறப்புக்கு அவசியம் போ" என்றே சொல்வர். திருமணத்தில் ஒரு மனிதன்  வாழ ஆரம்பிக்கின்றான். இறப்பில் தன் பயணத்தை நிறுத்திக்கொள்கிறான். இறந்தவர் மிகவும் இறுக்கமான சூழ்நிலையைப் பிடித்தவர்களுக்குப் பரிசாக விட்டுச்செல்கிறார். அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வெளிவருவது அவ்வளவு எளிதல்ல...

National Grief Awareness day

இழப்பினை சந்தித்தவர்கள் பெரும் வருத்தத்தில் இருப்பர். அவர்கள் தங்கள் சகஜ நிலைக்குத் திரும்ப சில வாரங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகலாம், என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் ஐந்து நிலைகளைக் கடந்தே உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களின் மனவலியைப் புரிந்து கொண்டு ஆதரிப்பதற்காகவும், தேற்றுவதற்காகவும், Angie cartwright என்பவர் 2014-ம் ஆண்டில் Grief Awareness Day-வை தொடங்கினார்.

மறுப்பு :

இறப்பின் செய்தியைக் கேட்டதும் ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்காது. உலகமே இருண்ட உணர்வு. இனிமேல் வாழ்க்கையை எப்படி கடப்பது, அப்படிக் கடந்தாலும் அவர்/அவள் இல்லாத வாழ்க்கையை நான் எப்படி கடக்கப் போகிறேன்? என்ற விரக்தி. நினைவலைகள் தொடர்ந்து தாக்கி உணர்வற்று வருத்தத்தில் மூழ்கியிருப்பர்.

கோபம்: 

இரண்டாவது நிலை கோபம்.  இழப்பின் வலியை உணர ஆம்பித்தவர்கள், விரக்தியடைவர். இந்த உணர்வே கோபமாக மாறுகிறது. இந்த கோபம் காரணமே இல்லாமல் இருக்கும். நண்பர்கள் மீதும் , குடும்பத்தினர் மீதும் எரிச்சல் அடைவர். கடவுள் நம்பிக்கை இழந்து வசைபாடத் தொடங்குவர். அதீத கோபத்தில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் அபாயமும் உள்ளது.

National Grief Awareness

வாக்குவாதம் /பேரம் பேசுதல்:

ஏன் இப்படி நடந்தது? எதனால் நடந்தது? என புலம்புவர். இறப்பினை நாம் தடுத்திருக்கலாம் என தன்னைத்தானே குறை சொல்லிக்கொள்வார்கள். மனதுக்குள் பல கேள்விகள் எழும். 

மன அழுத்தம்:

பல கேள்விகள், குழப்பங்களுக்குப் பின்னால் மனம் வெறுமை அடையும். இந்த வெறுமையான உணர்வினால் மன அழுத்தத்துக்கு ஆளாவர். தனிமையிலேயே நேரத்தைச் செலவிடுவர். தூக்கமில்லாமல் தவிப்பர். பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஏற்றுக்கொள்ளுதல்:

இதுவே இறுதி நிலை. நாம் அன்பு வைத்த ஒருவர் உடல் அளவில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற உண்மையை மனம் ஏற்றுக்கொள்ளும். இதுவே எதார்த்தம் என உணர்ந்து வாழ்க்கையில் முன்னே நகர்ந்து செல்லத் தொடங்குவர்.

வருத்தத்திலிருந்து விடுபட சில வழி முறைகள்:

கோபம், பயம், குழப்பம், மன அழுத்தம் என பல மாற்றங்கள் மனதுக்குள் இருக்கும். இவற்றை எதிர்கொள்ள, தனிமையை விடுத்து பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். இது சந்தோஷத்தைக் கொடுக்கும்.

பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுங்கள்.

துன்பத்தை மறக்க மது அருந்தாதீர்கள். இது கவலையை இன்னும் அதிகப்படுத்தும். 

துக்கமான சூழ்நிலையில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement