Published:Updated:

பாதை இல்லாததால் வயல்களில் நடந்து செல்லும் மாணவர்கள்... சிவகங்கையில் அவலம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா நாரணமங்களம் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையைத் திடீரென முள்வேலி போட்டு அடைத்ததால் அந்த மக்கள் பாதையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து சேவுகபெருமாளிடம் பேசும் போது..." எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 33 குடும்பங்கள் இங்கு வசித்து வருகிறோம். கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் தெருவிற்கு வரக்கூடிய பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இந்தச் சாலையைத் தவிர வேறு எந்தச் சாலையும் எங்களுக்குக் கிடையாது. இந்தச் சாலை கே.சிறுவனூர் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2005-2006 ம் ஆண்டு SGRY திட்டத்தில் கிராவல் சாலை போடப்பட்டது.

இந்நிலையில் திடீரென நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாலையை அடைக்கப் போவதாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த குமார் எ கணேசன்,சேகரன், பூமிநாதன், ஆகியோர் நாங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சாலையை முள்வேலி போட்டு அடைத்து விட்டார்கள். எங்களுக்குச் சாலை இல்லாததால் வயல்களில் நடந்து செல்கிறோம். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. மருத்துமனைக்குச் செல்லமுடியவில்லை.

ஆனாலும் நாங்கள் நான்கு கிலோமீட்டர் சுற்றிப் போகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் புதிதாக வந்திருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறோம் .ஆட்சியரால் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு செல்கிறோம் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு