Published:Updated:

நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு வகுப்பு நடத்திய தீயணைப்புத் துறையினர்!

நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு வகுப்பு நடத்திய தீயணைப்புத் துறையினர்!
நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு வகுப்பு நடத்திய தீயணைப்புத் துறையினர்!

நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு வகுப்பு நடத்திய தீயணைப்புத் துறையினர்!

நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு வகுப்பு நடத்திய தீயணைப்புத் துறையினர்!

சென்னை மாநகரை அதன் பகுதிகளுக்குள் இணைப்பது அண்ணா பாலம். அதன் அருகில் ’தி பார்க்’ நட்சத்திர விடுதி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தப் பகுதியிலிருந்து சில மைல்களே தூரம் இருக்கும் ‘சென்னை சில்க்ஸ்’ கட்டடம் தீ விபத்துக்குள்ளாகி, பெரும் பொருட்சேதத்தைச் சந்தித்தது. மக்களுக்கு அந்த விபத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதல் தருவதாக அமைந்தது.

இன்று ‘தி பார்க்’ விடுதி தனது ஊழியர்களுக்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருடன் இணைந்து ஆபத்தான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது, தீ பிடிக்கும் சமயங்களில் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படி உதவுவது போன்றவற்றை செயல்முறை விளக்கங்களோடு கற்று தந்தனர். மேலும் தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் முறை, தீயில் சிக்கி கொண்டவரை மீட்கும் சில வழிவகைகள் பற்றி செயல் விளக்கமும் அளித்தனர்.

தீயினை மூலப்பொருளாக வைத்து மூன்று  (ஏ, பி, சி) வகைப்படுத்தி, எந்த வகைக்கு எந்த தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி ஹோட்டல் பணியாளர்களைச் செய்துகாட்ட வைத்தனர். எந்த ஒரு தீயாக இருந்தாலும் oxygen, எரிபொருள் மற்றும் வெப்பம் இருந்தால் மட்டுமே அதனால் தொடர்ந்து எரியமுடியும். இதைக் குறைப்பதன் மூலம் தீயினைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். மேலும், எந்தத் தீயினை அணைக்க முயலும் போதும், காற்றின் எதிர் திசையிலிருந்து அதனை அணைக்க முயல்வதே சிறப்பான வழி. பின்பு தீயணைப்பதற்கு இருக்கும் பெரிய தண்ணீர் குழாய்களை எப்படிப் பயன்படுத்துவது; காயம்பட்ட அல்லது சுயநினைவு இழந்தவர்களை எப்படித்தூக்கிச் சென்று முதலுதவி செய்யவேண்டும் என்றும் பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுபோன்ற தீயணைப்பு முன்னெச்சரிக்கை கேம்ப்கள் 'தி பார்க் ஹோட்டலில் நடைபெறுவது இது முதல்முறை அல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சென்னை மாவட்டத் துணை அலுவலர் கார்த்திகேயன் ‘மக்களுக்குச் செயல்முறை விளக்கங்களோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளைக் கற்றுத்தர தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தயாராகவுள்ளது’ என்று கூறினார். 

அடுத்த கட்டுரைக்கு