Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஒரு கப் காபி சாப்பிடலாமா?’ (sponsored content)

‘ஒரு கப் காபி சாப்பிடலாமா?’ - இது உலகத்துல பொதுவா கேட்கப்படுற கேள்விகள்ல ஒண்ணு. இரு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, வேலைப்பளுவின் அசதியை மறக்க உடன் பணிபுரிபவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டே, அதிகாலை பேப்பரை வாசித்தபடியே தனிமையில், எதிரே அமர்ந்திருக்கும் காதலியின் கண்களைப் பார்த்தபடியே, முக்கியமான மீட்டிங்கிற்கு இடையே, நீண்ட நெடிய பயணத்தில் இளைப்பாறும் நேரத்தில் என பல தருணங்களில் இதைக் கேட்டிருப்போம்; காபியை மெய்மறந்து சுவைத்திருப்போம். இந்த காபி நம் தமிழர்களின் வாழ்வில் ஒன்றெனக் கலந்தது எப்படி என்று தெரியுமா?

காபி முதன்முதலில் தோன்றியது எத்தியோப்பியாவில் என்றபோதும், ஆங்கிலேயர்களோடு நம் நாட்டுக்குள் வந்தபோது, அவர்களோடு சேர்ந்து காபியும் வந்தது. இது தமிழனின் பாரம்பர்ய உணவு அல்ல என்ற போதும், உழைப்பை நம்பி இருப்பவர்களுக்கு உற்சாகமூட்டும் பானமாக இருந்ததால், எல்லோராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. துவக்கத்தில் காபி பெரும்பான்மையான மக்களால் எதிர்க்கப்பட்டது. அதன் ‘விழித்திருக்கச் செய்யும்’ பண்பு அதனை மதுவோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது. 

ஆனால், காலப்போக்கில் படித்தவர்கள் காபி குடிப்பதை பேஷனாகவும், சமுதாய அந்தஸ்து உள்ள செயலாகவும் மாற்றியபோது, காபிக்கான சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. மெல்ல மெல்ல பொதுஜன மக்களின் செல்லப்பிள்ளையாய் மாறியது வரலாறு. காப்பிக் கொட்டைகளை வறுத்து, பொடிசெய்து கிடைக்கும் காபி பவுடரை கொஞ்சம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து இன்ஸ்டன்ட்டாகவோ, பில்டர் காபியாகவோ குடிக்கலாம். 
காலை எழுந்ததில் இருந்து நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவுவது காபியே என்றால் மிகையாகாது. இன்றும் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், விருந்தோம்பல் செய்வது நம் தமிழ் மரபு. அவர்களுக்கு காபி கொடுத்து உபசரிப்பது நம் தமிழர் பண்பு. 


பாரம்பர்யமாய் தமிழர்கள் குடித்து வரும் ‘பில்டர்’ காபி, இன்றைய கேப்பச்சீனோ, எஸ்பிரஸ்ஸோ வகை காபிகளை விட ஸ்ட்ராங்காக இருக்கும். இந்த காபி தயாரிப்பதே ஒரு இனிமையான கலை. காபி மெஷின்களின் வரவுக்கு முன், உருளை வடிவத்தில் இருக்கும் ஒரு சில்வர் பாத்திரத்தில்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. அதன் நடுவே வடிகட்டி போன்ற துளையுடன் கூடிய அமைப்பும், கீழே வடிந்து வரும் காபியை சேகரிக்க ஒரு பாத்திரமும் இருக்கும். மேலே உள்ள பாத்திரத்தில் புதிதாய் காபி கொட்டையிலிருந்து அரைக்கப்பட்ட காபி பொடி சேர்க்கப்பட்டு, அதனுடன் சிறிது வெந்நீர் ஊற்றி, ஒரு அழுத்தும் கருவியை வைத்து மூடியை மூடிவிடுவார்கள். வடிகட்டியின் வழியே சொட்டு சொட்டாக வழியும் காபியை சிறிது நேரம் கழித்து எடுத்து, 
அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு ‘டவரா-டம்ளரில்’ ஊற்றி பரிமாறுவார்கள். மணம் கமழும் காபியில் மனம் மயங்காதவர் யாரும் இருக்கமுடியாது. 

அதே போல, காபி என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘காபின்னா, நரசுஸ் காபிதான். பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு’ என்ற விளம்பரம்தான். 1926 முதல் தமிழர்களின் சுவை அறிந்து தரமான காபியை அளித்து வரும் நரசுஸ், தற்போது அதே சுவை மற்றும் தரத்துடன் வெளிநாடுகளிலும் கிடைக்கிறது. 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய சூழலுக்கு ஏற்ப, ‘திருமணங்கள் காபியில் நிச்சயிக்கப்படுகிறது’ என்றே கூறலாம். அது காபி ஷாப் காபியா, வீட்டில் பெண் பார்க்க வரும்போது மணப்பெண் போடும் காபியா என்ற சாய்ஸ் மட்டும் வீட்டுக்கு வீடு 
மாறுபடும்! 

நரசுஸ் காபியைப் பற்றி மேலும் சுவையான தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement