Published:Updated:

1,848 பேரின் லைசென்ஸை ரத்துசெய்ய போலீஸ் கமிஷனர் பரிந்துரை!

1,848 பேரின் லைசென்ஸை ரத்துசெய்ய போலீஸ் கமிஷனர் பரிந்துரை!
1,848 பேரின் லைசென்ஸை ரத்துசெய்ய போலீஸ் கமிஷனர் பரிந்துரை!

1,848 பேரின் லைசென்ஸை ரத்துசெய்ய போலீஸ் கமிஷனர் பரிந்துரை!

கோயம்புத்தூரில் கடந்த ஒரு வருடத்தில் 191 பேர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,848 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்திருப்பதாகவும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை பொதுமக்களுக்கான புதிய இணையதள சேவைகளை இன்று முதல் தொடங்கியுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் அந்த சாலை விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதள வாயிலாகவே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக இனிமேல் காவல்நிலையம் செல்லத் தேவையில்லை. அதேபோல, லைசென்ஸ், ஆர்.சி புக் , பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ்கள் மற்ற அடையாள அட்டைகள் என மேற்கண்டவற்றில் எதாவது தொலைந்து போனாலும், தொலைந்ததற்கான  சான்றிதழை காவல் நிலையம் செல்லாமலேயே (http://eservices.tnpolice.gov.in) என்ற  இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் சேவையை கோவையில் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் தொடங்கிவைத்தார். 

இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய அமல்ராஜ்,  “கடந்த ஒரு வருடத்தில் கோவை மாநகரில் 3.9 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் இந்தாண்டு 191 பேர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆயிரத்து 848 பேரின் ஒட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்திருக்கிறேன். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . நாளை முதல் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு