இந்தியாவின் முதுகெலும்பு! (sponsored content) | Switch to solar energy now (sponsored content)

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (31/08/2017)

கடைசி தொடர்பு:18:28 (04/09/2017)

இந்தியாவின் முதுகெலும்பு! (sponsored content)

Switch to solar energy now (sponsored content)

உலகநாடுகளில் அதிகப்படியான பயிர்களை, ஆண்டு முழுவதும் பயிரிட முடியும் என்ற அற்புதமான கட்டமைப்பையும், இயற்கையின் கொடையையும் வைத்திருக்கும் நாடு நம் நாடு.
ஆனால், இன்றுவரை நம்மால் முழுமையான பயிர் உற்பத்தியை லாபகரமாகத்தான் பெற முடியவில்லை. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நீர். 

நீரின் பயன்பாட்டை வரிசைப்படுத்திப் பார்க்கையில், அது விவசாயத்துக்கு மிக முக்கியமான தேவையாகும். ஆறுகள் அல்லது நிலத்தடி நீரிலிருந்து பெறப்படுகிறது. இந்த நீரை மோட்டார்ப் பம்ப்கள் மூலம் பாசனத்துக்குப் பயன்படுத்துகிறோம். அதற்கு அவசியமான ஒன்று மின்சாரம்.

இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்துவிட்டு ஆயிரக்கணக்கில் காத்திருக்கிறார்கள் லட்சக்கணக்கான விவசாயிகள். ஏற்கெனவே பலவிதமான பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் நம் விவசாயிகளுக்கு, நமது அரசு அறிவித்திருக்கும் சிறப்பு திட்டமானது தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு தரப்படும் என்பதே. தட்கல் முறையில் பல லட்சங்கள் செலவுசெய்து வாங்க வேண்டும் என்ற அறிவிப்பில் உள்ள உண்மை, அது இலவச மின்சாரம் இல்லை என்பதுதான். சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால், சிறு குறு விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையிலும், பெரும் விவசாயிகள் தனியாகவும், தத்தமது மின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

மேலும், மின்சாரத்தைப் பொறுத்தவரை, அதன் உற்பத்தியானது மிகவும் குறைவு. நம் விவசாய நிலங்களுக்கு அதை எடுத்துச் செல்லும்போது அதன் மின் நஷ்ட வரைவு அதிகமாகவும், அதற்கான பொருள் செலவுகள் மிக அதிகமாகவும் உள்ளது.  எனவே, இதற்கான மாற்று வழியைத் தேடவேண்டிய சூழலுக்கு உள்ளாகிறோம். எக்காலச் சூழலிலும் சூரிய மின் உற்பத்தியே அதற்கு மாற்றாக இருக்க முடியும். சென்னையைத் தலைமையிடமாக கொண்ட “ட்ரையோ சோலார்”  நிறுவனம், சூரிய ஒளி மூலம் பம்ப்களை இயக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்து வெற்றியும் அடைந்துள்ளது. சூரிய ஒளியால் இயக்கப்படும் பம்ப்களின் சிறப்பம்சங்கள் பின் வருவன,

·   பம்ப்களின் திறன் குறைக்கப்பட வேண்டியதில்லை.
·   சிறப்புக் கட்டுமானம் அவசியமற்றது.
·   மின் சேமிப்புக் கலன் (BATTERY BANK) தேவையில்லை.
·   உபயோகத்தில் உள்ள பம்புகளையே சூரிய ஒளி மூலம் இயக்க முடியும்.
·    இதன் 25 வருட இயங்கும் தன்மையானது, அதன் முதலீட்டை ஒப்பிடுகையில் மிக மலிவானவை.


‘இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது' என்று கூறினார் நம் ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி. அதற்கான ஒருபடியாக இந்த சூரிய ஒளி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகள் உதவியாக இருக்கும். நிச்சயம் விவசாயம் செழிக்கும்!

மேலும் விவரங்களுக்கு..: http://www.triosolar.in/

மேலும் விபரங்களுக்கு: ட்ரையோ சோலார் (பி) லிட், எண்.268, முதல் தளம், வள்ளுவர் கோட்டம் ஹைரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. போன்: 044 - 4359 0422.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close