Published:Updated:

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் ஆலை நடுநிலைப் பள்ளியில், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான சுகாதாரக் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை மாணவர்கள் உண்ணக்கூடாது, சத்தான உணவுகளையே உண்ண வேண்டும். சாப்பாட்டில் காய்கறிகள், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் முன்பு, சோப்புப் போட்டு கைகளை நன்றாகக் கழுவிய பிறகே, சாப்பிட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி சுகாதாரக்கல்வி பயிற்றுநர் முத்துமுருகன், சுகாதாரக் கல்விகுறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

இதுகுறித்து முத்துமுருகன் மாணவர்களிடம், ‘’மனிதர்கள் வாழ சத்தான உணவுப் பொருள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பது மிக முக்கியம்.  மனிதருக்கு வரும் பல நோய்கள், கிருமிகளால்தான் வருகிறது. இந்தக் கிருமிகள் அதிகம் இருக்குமிடம் கைகள்தான். அதனால், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதனால்தான், உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி ‘சர்வதேச கை கழுவும் தின’மாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது’’ என்று கூறியவர், கைகழுவும் முறைகுறித்து விளக்கினார். ‘ஒரு மேஜையில் 4 கண்ணாடி டம்ளர்களில் தண்ணீர் வைத்து, அதை விளக்கினார்.

முதல் கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், சுத்தமானது. இரண்டாவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், கை கழுவியது. மூன்றாவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், சோப்புப் போட்டு கை கழுவிய தண்ணீர், நான்காவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், சோப்புப் போட்டு கை கழுவிய பின், மீண்டும் கழுவிய தண்ணீர். இதில் இரண்டாவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், கைகளில் உள்ள அழுக்கினால் மாசுபட்டு நிறம் மாறி இருக்கிறது, மூன்றாவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், சோப்புநுரை கலந்தது. ஆனால், நான்காவது கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீர், முதல் கண்ணாடி டம்ளரிலுள்ள தண்ணீரைப் போல சுத்தமாக உள்ளது. ஆக, மாணவர்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவினால் மட்டுமே கிருமிகள் தொற்றாது’’ என விளக்கியதோடு, 250 மாணவர்களுக்கும் சோப்புப் போட்டு கை கழுவும் முறை செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்கள், தினமும் சோப்புப் போட்டு கைகழுவிய பிறகே, சாப்பிடுவோம் என உறுதிமொழி எடுத்தனர். பிறகு, மாணவர்கள் தனித்தனியாக சோப்புப் போட்டு கை கழுவினர். சுத்தமாகக் கை கழுவிய பின்னர், மாணவர்கள் மதிய உணவுக்குச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு