Published:Updated:

குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

Published:Updated:
குடியிருப்பில் புகுந்த ராஜநாகம்..! பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில், வீட்டுக்குள் ராஜநாகம் புகுந்ததால், அங்கு வசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், வனத்துறையினர் வந்து அந்த ராஜநாகத்தைப் பிடித்ததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். 

எப்போதும் ஈரப்பதம் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே ராஜநாகம் வசிக்கும். அவை வசிப்பதற்கு இதமான சூழல், நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் உச்சியில் நிலவுவதால், இந்தியாவில் இங்கு மட்டுமே ராஜநாகம் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் மக்கள் கண்ணில் படாத வகையில் இந்த வகைப் பாம்புகள் வாழ்ந்துவருகின்றன. இவற்றால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படுவது கிடையாது.

இந்த நிலையில், களக்காடு புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள மலையடிவாரக் கிராமமான ஆவுடையாத்தோப்பு என்ற இடத்தில், களக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுனில்குமார் என்பவருக்குச் சொந்தமான மாமரத் தோப்பு உள்ளது. அங்குள்ள மரத்தின் அடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பணியிலிருந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். அது சாதாரணப் பாம்பாக இருக்கும் எனக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அங்கிருந்து வெளிப்பட்ட பாம்பு, மாந்தோப்புக்குள் சென்றுள்ளது.

அப்போது, அதன் நீளத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தோட்ட ஊழியர்கள், ராஜநாகமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். வன ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது, அந்தப் பாம்பு புதர் பகுதியில் பதுங்கி இருந்துள்ளது. அதைப் பிடிக்க முயன்றபோது, சுமார் 7 அடி உயரத்துக்குத் தலையைத் தூக்கியபடி படம் எடுத்த பாம்பு, மரத்தின் மீது ஏறிப் பதுங்கியது. அப்போதுதான் அது ராஜநாகம் என்பதை அங்கிருந்த பணியாளர்கள் உணர்ந்து ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

வனத்துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி, அந்த ராஜநாகத்தை மரத்திலிருந்து கீழே தள்ளிப் பிடித்தனர். 16 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகத்தை அங்கிருந்து மீட்ட வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதியான சால ஓடைப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், ’இந்தப் பகுதிக்கு ராஜநாகம் வருவது இதுவே முதல்முறை. கருமை நிறம்கொண்ட இந்த ராஜநாகம், அடர்ந்த வனப் பகுதியில் மட்டுமே வாழக்கூடியது. முட்டையிடுவதற்காக பாதுகாப்பான இடம் தேடி அலைந்தபோது வழிதவறி குடியிருப்புப் பகுதிக்கு வந்திருக்கக்கூடும்’ எனத் தெரிவித்தனர். குடியிருப்புப் பகுதியில் முதல்முறையாக ராஜநாகம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.