Published:Updated:

நிலக்கரி முறைகேடு: பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஹசாரே குழுவினர் கைது!

நிலக்கரி முறைகேடு: பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஹசாரே குழுவினர் கைது!
நிலக்கரி முறைகேடு: பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஹசாரே குழுவினர் கைது!

புதுடெல்லி:

நிலக்கரி முறைகேடு: பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஹசாரே குழுவினர் கைது!

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேட்டிற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற அன்னா ஹசா‌ரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா,கோபால் ராய் உள்ளிட்டோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கேடி இழப்பு ஏற்பட்டு  இருப்பதாக,மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை காங்கிரஸ்,பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே மூடி மறைக்கப் பார்ப்பதாகவும்,எனவே, இதை கண்டித்து டெல்லியில்  பிரதமர் மன்மோகன்சிங்,பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்காரி ஆகியோர்  வீடுகள் முன்பு ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா  ஹசாரே குழு உறுப்பினர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

ஆனால் அன்னா ஹசாரே குழுவினரின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் நேற்று அனுமதி மறுத்தனர்.
 
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்மோகன் சிங், நிதின் கட்கரி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.இவர்களது வீடுகளுக்கு  செல்லும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு,கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

##~~##
மேலும் டெல்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போலீஸ் தடையை மீறி இன்று காலை பிரதமர் வீட்டை முற்றுகையிடுவதற்காக வந்த அன்னா ஹசா‌ரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா,கோபால் ராய் உள்ளிட்டோர்குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும்,திட்டமிட்டபடி தமது குழுவை சேர்ந்தவர்கள் திட்டமிட்டபடி பிரதமர் வீட்டின் முன்னர் போராட்டம் நடத்துவார்கள் என்று கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.