Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி-யில் என்ன எதிர்பார்க்கலாம்?

மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட், மஹிந்திராவின் TUV 3OO போன்ற காம்பேக்ட் எஸ்யூவி-களுக்குப் போட்டியாக, சுமார் 8 - 12 லட்சம் ரூபாயில் `நெக்ஸான்' எனும் காம்பேக்ட் எஸ்யூவி-யைக் களமிறக்க உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். செப்டம்பர் 21, 2017 அன்று அறிமுகமாக உள்ள இந்த எஸ்யூவி-யின் புக்கிங், இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. டாடா டீலர்கள் சிலர், புக்கிங்கை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். எனவே, 4 வேரியன்ட்கள் (XE, XM, XT, XZ+) மற்றும் ஐந்து கலர்களில் (Moroccan Blue, Vermont Red, Seattle Silver, Glasgow Grey, Calgary White) பிடித்தமானதை டாடாவின் டீலர்கள் அல்லது டாடாவின் வலைதளத்தில், 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக் செய்யலாம்.

நெக்ஸான்

தனது Impact டிசைன் கோட்பாடுகளின்படி, நெக்ஸானை, ஸ்போர்ட்ஸ் கூபேபோல வடிவமைத்திருக்கிறது டாடா நிறுவனம். காரில் இடம்பெற்றுள்ள டூயல் டோன் ஃப்னிஷ் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள், இதற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அகலமான கிரில்லின் இருபுறங்களும், LED DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட் அழகாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. Ivory White Belt-Line உடனான காரின் பக்கவாட்டுப் பகுதி, படு அசத்தலாகக் காட்சியளிக்கிறது. முன்பக்கத்தைப்போலவே, LED டெயில் லைட்களை, X வடிவ செராமிக் பட்டை ஒன்றுசேர்க்கிறது. உயரமாக இருக்கும் பின்பக்க பம்பரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. எனவே, கார் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றத்தைக்கொண்டிருந்தாலும், அதை பார்க் செய்வது ஈஸிதான். 

tata nexon

காருக்குள்ளே நுழைந்தால், மூன்று அடுக்குகளால் ஆன டேஷ்போர்டு நம்மை வரவேற்கிறது. அதன் மேல்பகுதியில் இடம்பெற்றுள்ள 6.5 இன்ச் Harman இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆண்ட்ராய்டு ஆட்டோ இருக்கிறது. இதனுடன், எட்டு ஸ்பீக்கர்களுடன்கூடிய ஆடியோ சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் மற்றும் 60:40 ஸ்ப்ளிட் பின்பக்க இருக்கை ஆகியவற்றின் குஷனிங் மற்றும் இடவசதி, மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 31 ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களைக்கொண்டிருக்கும் நெக்ஸானின் கேபின், ஜெர்மானிய லக்ஸூரி கார்களில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. 

vitara brezza

நெக்ஸானில் இருக்கும் புதிய 1.2 லிட்டர் Revotron டர்போ பெட்ரோல் இன்ஜின், 110bhp பவர் மற்றும் 17kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதுவே புதிய 1.5 லிட்டர் Revotorq டீசல் இன்ஜின் என்றால், அது 110bhp பவர் மற்றும் 26kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. டிரைவிங் மோடுகளைக் (Eco, City, Sport) கொண்டிருக்கும் இந்த இரண்டு இன்ஜின்களும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. டியாகோவைப்போலவே, நெக்ஸானிலும் AMT கியர்பாக்ஸை பின்னாளில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது டாடா நிறுவனம். இரண்டு காற்றுப் பைகள், ABS, EBD, Pretensioner & Load Limiter உடனான சீட் பெல்ட், இன்ஜின் Immobilizer, ISOFIX போன்ற பாதுகாப்பு வசதிகள், அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது ப்ளஸ். 

விட்டாரா பிரெஸ்ஸா

நெக்ஸானின் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் Dual Path சஸ்பென்ஷனை, சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்விதமாக, டாடா ட்யூன் செய்திருக்கிறது. மேலும், காரின் உறுதியான கட்டுமானமும், விபத்தின்போது ஏற்படும் சேதத்தை உள்வாங்கிக்கொள்ளும்விதமும் இந்த காரின் சிறப்பம்சங்களாக கூறப்படுகின்றன. எனவே, தனது ஒட்டுமொத்த வித்தையையும் நெக்ஸானில் காட்டியிருக்கும் டாடா நிறுவனம், அசத்தலான விலையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உற்பத்தி பணிகளும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close