Published:Updated:

தயாரிப்பாளர் வருண்மணியனுக்கு விரைவில் திருமணம்!

தயாரிப்பாளர் வருண்மணியனுக்கு விரைவில் திருமணம்!
தயாரிப்பாளர் வருண்மணியனுக்கு விரைவில் திருமணம்!

திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டு, இரு வீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தியான கனிகா குமரனுக்கும் கடந்த சில மாதங்களாகவே காதல் இருந்துவந்துள்ளது. கனிகா ஃபேஷன் தொடர்பான இதழ் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, நிச்சயமும் செய்துகொண்டனர். இவர்களது திருமணம், வரும் அக்டோபர் மாதத்தில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன், வருண் மணியனுக்கும், முன்னணி நடிகையாக வலம்வந்த த்ரிஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமண நிச்சயம் வரை முடிந்திருந்த நிலையில், கடைசியில் ஏதோ சில காரணங்களால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. அதன் பின்னர் வருண் மணியனுக்கும், நடிகை பிந்து மாதவிக்கும் இடையே காதல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அது உண்மையல்ல என்று வருண் மணியன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வருண் மணியன் 'வாயை மூடிப் பேசவும்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.