Published:Updated:

அதிக பணம் வசூலித்த 49,000 ஆதார் மையங்கள் மீது நடவடிக்கை! 

அதிக பணம் வசூலித்த 49,000 ஆதார் மையங்கள் மீது நடவடிக்கை! 
அதிக பணம் வசூலித்த 49,000 ஆதார் மையங்கள் மீது நடவடிக்கை! 

ஆதார் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலித்த 49,000 ஆதார் மையங்கள் மீது உதய் (UIDAI - The Unique Identification Authority of India) நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நம் நாட்டில், பல ஆதார் பதிவு மையங்கள் ஆரம்பத்திலிருந்தே விண்ணப்பதாரர்களைச் சேர்ப்பதற்காக அதிகப் பணம் வசூலித்து ஏமாற்றி வந்தன. ஆதார் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகப்படியான புகார்களைப் பெற்றதாக, உதய் நிறுவனமும் தெரிவித்திருந்தது. உதய் நிறுவனத்திடம், 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகப்படியான பணம் வசூலித்ததாக 6,100 புகார்கள் பதிவாகின. சம்பந்தப்பட்ட ஆதார் மையங்கள்மீது தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஜூலை 2017 முதல், அதிகப் பணம் வசூலிப்பதாக 466 புகார்கள் பதிவாகின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஆதார் மையங்கள்மீதும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது, ஆதார் சேவைக்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகப் பணம் வசூலித்த 49,000-க்கும் அதிகமான ஆதார் மையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆதார் மையங்களை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதய் நிறுவனம் தடைசெய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.