Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

பறக்கும்... ஆனா பறக்காது!

நானே கேள்வி... நானே பதில்!

பறக்கும்... ஆனா பறக்காது!

Published:Updated:
##~##

''உரிமைப் பிரச்னை, கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், வெட்டுத் தீர்மானம் இதற்கெல்லாம் என்னங்க அர்த்தம்?''

 ''உரிமைப் பிரச்னை: 'வரும் ஞாயிறு, நாம் என் அக்கா வீட்டுக்குப் போகலாம்’ என்று நான் சொல்வது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவன ஈர்ப்புத் தீர்மானம்: 'சினிமா போகலாம்’ என்று என் பையன் சொல்வது.

ஒத்திவைப்புத் தீர்மானம்: 'அதை ஞாயிறு அன்று முடிவு செய்யலாம்’ என்று என் மனைவி சொல்வது.

வெட்டுத் தீர்மானம்: கடைசியாக, நாங்கள் எல்லோரும் ஞாயிறு அன்று என் மச்சினி வீட்டுக்குச் செல்வது!''

- கே.வேங்கடரமணி, சென்னை-17.

''நகரத்தில் வசிக்கும் கிராமத்து இளைஞர் களின் மனநிலை எப்படி இருக்கும்?''

''இதை அழகாகச் சொல்கிறது கவிஞர் பச்சியப்பனின் கவிதை ஒன்று...

'ஒவ்வொரு முறை
ஊருக்குப் போகும்போதும்
யாரேனும் ஒருவர்
இறந்திருக்கிறார்
அல்லது
ஏதேனும் ஒரு வீடு
காலியாக இருக்கிறது!''’

- ஜூலி, ஊட்டி.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'எங்களைப்போல எந்தக் கட்சிக்காவது கொள்கை இருந்தால், அந்தக் கட்சியில் சேர்ந்துவிடுவோம்’ என்று அடிக்கடி ராமதாஸ் கூறி வருகிறாரே, அப்படி என்னதான் பொன்னான கொள்கை வைத்திருக்கிறார்?''

''என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? ஏழை எளிய மக்களின் நலனுக்காகப் போராடும் ஒரு போராளியை, உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதியை, மதுவிலக்கையும் புகைவிலக்கையும் அமல்படுத்த நினைக்கும் காந்தியவாதியை - அதாவது அன்புமணியை முதல்வர் ஆக்குவதுதான் அது. இப்ப சொல்லுங்க, இந்த உயரிய கொள்கை வேறு எந்தக் கட்சிக்காவது இருக்கா?''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

''ஊழல் செய்பவர்களுக்கும் திஹார் சிறை, ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் திஹார் சிறை என்பது சரிதானா?'

''ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்தே உடைக்கப்பட்டால், ஜனனம்!'

- கே.சுப்பராஜன், ஆனையூர்.

''அவ நம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?''

''ஒரு கல்லூரியில், புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஒரு குட்டி விமானத்தில் 10 பேராசிரியர்களை உட்காரவைத்துவிட்டு கல்லூரி முதல்வர் சொன்னாராம், 'இது உங்கள் மாணவர்கள் வடிவமைத்த விமானம். இதில் பயணித்துவிட்டு வந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்’ என்று. 'ஐயையோ, எங்கள் மாணவர்கள் வடிவ மைத்ததா? எங்கேயாவது விழுந்து நொறுங்கிவிடும்’ என்று எட்டு பேராசியர்கள் பதறி எழுந்து விமானத்தைவிட்டு இறங்கிவிட்டார்கள். பயப் படாமல் விமானத்தில் அமர்ந்திருந்த இரண்டு பேராசிரியர்களை முதல்வர் பாராட்டினாராம். அதற்குப் புன்னகையுடன் அவர்கள் சொன்னார் களாம், 'முதலில் இந்த விமானம் பறக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. பிறகுதானே அது விழுவதற்கு?''

- ராகவ்.மகேஷ், தஞ்சாவூர்.

நானே கேள்வி... நானே பதில்!