Published:Updated:

காவிரி: தமிழக அரசு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

 காவிரி: தமிழக அரசு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
காவிரி: தமிழக அரசு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
 காவிரி: தமிழக அரசு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி: காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தின் மனுவுக்குப் பதில் அளித்துள்ள மத்திய அரசு, ""பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்டுவதற்குத் தயாராக உள்ளளேம்'' என்றும், ""டிசம்பர் மாதம் வரை தண்ணீர் வழங்க முடியாது'' என்று கர்நாடக அரசும் தனித்தனியாகப் பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இதையடுத்து, இன்று நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள், இரண்டு மாநில அரசுகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

""பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும். கோடைக் காலங்களில் அணைகளில் உள்ள நீரைப் பாசனத்துக்காகக் கர்நாடக அரசு பயன்படுத்தக் கூடாது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்'' என்று தமிழக அரசு மூன்று இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவைக் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் அடங்கிய அமர்வு விசாரித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களுக்கு மத்திய அரசும் கர்நாடக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசும், கர்நாடக அரசும் பதில் மனுக்களைக் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளன.

##~~##
கர்நாடகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு தனியாக ஓர் இணைப்பு மனுவையும் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் உள்ள நீரின் அளவைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் வறட்சி நிலவும்போது தமிழகத்துக்கு எப்படி நீர் வழங்குவது என்றும் வறட்சிக்குத் தக்கபடி புதிய நீர்ப் பங்கீட்டு முறையை வகுக்க வேண்டும் என்றும் கோரி திங்கள்கிழமை மீண்டும் ஓர் இணைப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தகைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை, இரு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், நீர்ப்பாசனத்துக்காகக் காத்திருக்கும் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.