Published:Updated:

வேன் டிரைவருக்கு ’ஹெல்மெட்’ அபராதம்; கோவை எஸ்.பி விளக்கம்!

வேன் டிரைவருக்கு ’ஹெல்மெட்’ அபராதம்; கோவை எஸ்.பி விளக்கம்!
வேன் டிரைவருக்கு ’ஹெல்மெட்’ அபராதம்; கோவை எஸ்.பி விளக்கம்!

கோவை மாவட்டம் ஆலந்துறையைச் சேர்ந்த கருணாகரன் என்பவர், 13-ந் தேதி இரவில் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, காருண்யா நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் நிறுத்தி சோதனையிட்டார். ஆவணங்கள் சரியாக இருக்கவே, ஹெல்மெட் அணியாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. ரசீதில், டாடா ஏஸ் வாகனம்,  ஹெல்மெட் அணியவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து, காருண்யா நகர் காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, 'அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. சங்கரபாண்டியன் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் இங்கு யாரும் பணியில் இல்லை '' என பதில் அளித்தனர். கருணாகரனிடம் பேசியபோது, 'தன்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் சமாதானம் பேசி மன்னிப்புக்கேட்டதாகவும் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்'' எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

இந்நிலையில்,  'வேன் டிரைவருக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதம் ' என மீடியாக்களில் செய்தி வெளியானது. தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி.மூர்த்தி,  சப்- இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனிடம் விசாரணை நடத்தினார். பின்னர், எஸ்.பி மூர்த்தி கூறுகையில், ''ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வேன் டிரைவர் சீருடை அணியவில்லை. அதற்காக ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ரசீதில் ஹெல்மெட் என்று சங்கரபாண்டியன் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். ஹெல்மெட் அணியவில்லை என்றால், ரூ.100 அபராதம் விதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.